சீனாவின் மிகப்பெரும் ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா தனது சிங்கிள் டே விற்பனையில் சாதனை படைத்துள்ளது.சீனாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 11ந் தேதி சிங்கிள்டேவாகக் கொண்டாடப்படுகிறது. சிங்கிள்ஸ் டே அல்லது 11/11 டே எனக் கொண்டாடப்படும் இந்த நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தொடங்கி 11-ஆம் தேதி முடிய அங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ரிலேஷன்ஷிப்பில் இல்லாத மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் அங்குள்ள ஆன்லைன் விற்பனை நிலையங்கள் தள்ளுபடி விற்பனைகளை அறிவிக்கும். அந்த வகையில் பெரும் ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா இந்த வருடம் 84.54 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. இதன்படி ஒருநாளைக்கு 7.68 பில்லியன் டாலர் வீதம் இந்திய மதிப்பில் ரூபாய் 5,71,929 கோடியை ஈட்டியுள்ளது.










ஆனால் இந்த வர்த்தகம் கொண்டாடும் வகையில் இல்லை என அலிபாபா நிறுவனர் கூறியுள்ளார். காரணம் இது கடந்த ஆண்டு பதிவானதை விடக் குறைவு என்பதுதான். கடந்த ஆண்டை விட 14 சதவிகிதக் குறைந்த வர்த்தகம்தான் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் ஆன்லைன் நுகர்வோர் சந்தையில் நுகர்வோர் வரத்து கனிசமாகவே குறைந்துள்ளது. சீன அரசே ஆன்லைன் வர்த்தக விளம்பரங்களைக் கனிசமாகக் குறைத்து வருகிறது. இந்த வருடத்துக்கான விற்பனையைத் துவங்குவதற்கு முன்பே இந்த ஆண்டுக்கான விற்பனை குறைவாகத்தான் இருக்கும் என அந்த நிறுவனம் கனித்திருந்தது குறிப்பிடத்தக்கது.