Air India New Logo:  இந்தியாவில் உள்ள விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்- இந்தியா தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. 


இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் டாடாவும் ஒன்று. அதன் வசம் உள்ள விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா. தற்போது ஏர் இந்தியா தனது லோகோவை மாற்றியுள்ளது. அதில் அடர் சிவப்பு நிற பேக்-கிரவுண்டில் வெள்ளை நிறத்தில் ஏர் இந்தியா என எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்தியா என்ற சொல் முடியும் போது தங்க நிறத்தில் இறகுகள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் 470 புதிய விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. 




இந்த லோகோ வெளியீட்டின்போது ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களுக்கு சேவை செய்யும் லட்சியத்தை பிரதிபலிக்கிறது, மேலும் இது உலக அரங்கில் இந்தியாவை பெருமையுடன் பிரதிபலிக்கிறது" என்று ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் கூறினார்.


மேலும், "புதிய ஏர் இந்தியா துணிச்சலானது, நம்பிக்கையானது மற்றும் துடிப்பானது, ஆனால் அதன் செழுமையான வரலாறு மற்றும் மரபுகளுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது, இது இந்திய விருந்தோம்பல் சேவையின் தரத்திற்கான உலகளாவிய அளவுகோலாக மாற்றுகிறது" என்று அவர் கூறினார்.


ஏர் இந்தியா நிறுவனம் 70 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் விநியோகம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.