வோடபோன், ஏர்டெல்லை தொடர்ந்து போட்டிக்காக கட்டணத்தை உயர்த்திய ஜியோ.. ட்ரெண்டாகும் Reliance Jio

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜியோ தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், நிறுவனங்கள் தொடர்ந்து சமீப காலமாக கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான ஏர்டெல், அதன் கட்டண விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்தது. இது குறிப்பாக ப்ரீபெய்டு கட்டணங்களை 25% அதிகரிப்பினை செய்தது  ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி கட்டண அதிகரிப்பானது கடந்த நவம்பர் 26 முதல் அமலுக்கு வந்தது .

Continues below advertisement

இந்த கட்டண அதிகரிப்பினால் இனி, 79 ரூபாய் திட்டமானது 99 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. 28 நாட்களில் வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டமாகும். இதில் 200 எம்பி டேட்டா, லிமிடெட் கால் சேவையும் இதில் உண்டு. இதே 149 ரூபாய் மதிப்பிலான திட்டம், இனி 179 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இதே 219 ரூபாய் திட்டத்தினை, 265 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

ஏர்டெலின் இந்த அதிரடி விலை உயர்வை தொடர்ந்து, வோடபோன் நிறுவனமும் எம்பி டேட்டா, லிமிடெட் கால், அன்லிமிடெட் கால் என அனைத்திற்கும் கடந்த நவம்பர் 25 ம் தேதி முதல் விலையை உயர்த்தியது. 

இந்தநிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜியோ தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு இந்தியரும் உண்மையான டிஜிட்டல் வாழ்க்கை மூலம் அதிகாரம் பெற்ற நிலையான தொலைத்தொடர்புத் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்காக, ஜியோ இன்று தனது புதிய வரம்பற்ற திட்டங்களை அறிவித்தது. இந்தத் திட்டங்கள் தொழில்துறையில் சிறந்த மதிப்பை வழங்கும். உலகளவில் குறைந்த விலையில் சிறந்த தரமான சேவையை வழங்கும் ஜியோ வாக்குறுதியை நிலைநிறுத்தி, ஜியோ வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய அன்லிமிடெட் திட்டங்கள் 1 டிசம்பர் 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்றும்,  தற்போதுள்ள அனைத்து டச் பாயிண்ட்கள் மற்றும் சேனல்களிலிருந்தும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola