தமிழ்நாடு:


1. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு செல்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


2.  தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


3. மிக அதிக மழை  பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்' என முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


4. பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்கள் யாராயினும் பாலியல் தொந்தரவு செய்தால் அந்த குற்றவாளிகளை யார் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட தமிழ்நாட்டில் முதல் முறையாக கரூரில் பள்ளி மாணவிகளுக்காக "நிமிர்ந்து நில் துணிந்து செல்" என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான வாட்ஸ்அப் எண்ணை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.அறிமுகம் செய்துள்ளார். 


இந்தியா:


1. பெங்களூரில் உள்ள அரசு தமிழ் மேல்நிலைப்பள்ளியை மறுசீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து Abpnadu ஆசிரியரும் வைத்த கோரிக்கையை, கர்நாடக அரசு கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். 


2. தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு தனது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. 


உலகம் :


1. நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூலி அன்னி ஜென்டர் தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளிலேயே சென்ற நிகழ்வு  சமூக ஊடகங்களில் வைரலாகி  வருகிறது.  






குற்றம்:


1. மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் மாடியில்  20 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆடையின்றி அவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா நகரில் உள்ள அடுக்குமாடி அபார்ட்மெண்டில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.


சினிமா:


1. அமீர்கான் தயாரித்து நடிக்கும் லால் சிங் சத்தா படமும், யஷ் நடிக்கும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தனது படமும் அதே தினத்தில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு அமீர் கான் கேஜிஎஃப் படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


2. வாலு படத்தில் நடித்த போது, சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருப்பினும் ஹன்சிகாவின் நட்பிற்காக மகா படத்தில் சிம்பு நடித்தார். இந்த நிலையில்அவர்கள் மீண்டும்  நந்தா பெரிய சாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 


3. ஜெய் பீம் படத்தை பார்த்து முதலில் புகழ்ந்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது அதனை மாற்றி தற்போது விமர்சனம் செய்து இருப்பது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


விளையாட்டு:


1.நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2 வது இன்னிங்ஸில் 284 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.


2. இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் வில் யங் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 417 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேலும் மற்றொரு ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்கள் என்ற சாதனையை இவர் சமன் செய்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண