இந்தியாவில் 5G


இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம், இன்று (ஜூலை. 26) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நான்கு சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் முதல் நாள் முடிவில் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் சென்றுள்ளதாகவும், நாளை மீண்டும் 5ஆவது சுற்று தொடங்கும் எனவும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.






போட்டி போடும் நிறுவனங்கள்


72 ஜிகா ஹெட்ஸுக்கான ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ்- ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் – ஐடியா மற்றும் அதானி ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.


மேலும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடானது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் முடிவடையும் எனவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


5G வேகம்


சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 5 GB அடங்கிய திரைப்படத்தை, 35 நொடிகளில் 5G நெட்வொர்க்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் அதே திரைப்படத்தை 4Gயில் பதிவிறக்கம் செய்ய, 40 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில் நாளை ஜூலை 27ஆம் தேதி, இரண்டாம் நாளுக்கான ஏலம் நடைபெற உள்ளது. ஏலத்தில் வெல்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் யார் ஏலத்தை வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் காத்துள்ளனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண