தமிழ்நாட்டில் ஜவுளி வியாபாரத்தில் கோலோச்சி வரும் நிறுவனமாக விளங்கி வருகிறது போத்தீஸ் நிறுவனம். தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான போத்தீஸ் ஜவுளி வியாபாரத்தில் நான்கு தலைமுறைகளாக சிறந்து விளங்குகிறது. போத்தீஸ் நிறுவனம் தங்களது நீண்டகால கனவான தங்கநகை வியாபாரத்தில் கால் பதித்துள்ளது. ஜவுளி வியாபாரத்தில் கோலோச்சிய போத்தீஸ் தங்களது முதலாவது தங்க நகைக்கடையை திருநெல்வேலியில் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.


பரிபூர்ண கும்பத்தை அடையாளமாக கொண்ட போத்தீஸ் ஸ்வர்ணமஹால் திறப்பு விழாவை முன்னிட்டும், பொதுமக்களுக்கு நன்றி கூறும் விதமாக 150 ஜோடிகளுக்கு இலவசமாக போத்தீஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக நடத்தி வைத்தார். 150 மணமக்களுக்கும் திருமண புத்தாடைகள், திருமாங்கல்யம், தங்க மோதிரம் என 12 கிராம் தங்கமும், பீரோ, எவர்சில்வர் பாத்திரங்கள் மறறும் 10 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் போத்தீஸ் நிறுவனத்தின் சார்பாக சீதனமாக வழங்கப்பட்டது.


கொரோனா தடுப்பு விதிகள் காரணமாக மூன்று மத ஜோடிகளுக்கு மட்டும், அந்தந்த மதங்களின் முறைப்படி போத்தீஸ் நிறுவனர் ரமேஷ் தலைமையில் திருமணம் நடைபெற்றது.  மற்ற ஜோடிகளுக்கு அவரவர் இடங்களில் திருமணம் நடைபெற்றது.



போத்தீஸ் நிறுவனம் நடத்தி வைத்த இந்த திருமணம் பற்றியும், சீதனம் பற்றியும் பேசிய மணமகள்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருந்து செய்திருந்தால் கூட இந்தளவு பணம் அளித்து திருமணம் நடத்தியிருக்க மாட்டார்கள். பணம் இல்லாத நேரத்தில் இந்தளவு சீதனத்துடன் திருமணம் நடத்தி வைத்த போத்தீசுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று மனமார நன்றி கூறினர்.


சில இடங்களில் மணமகள்களின் தாயாரும், மணமகள்களும் ஆனந்த கண்ணீருடன், தங்கமாக ஒரு பொட்டு கூட திருமணம் நடத்துவதற்கு எங்களிடம் இல்லை. ஆனால், இந்தளவு சீதனத்தை நாங்கள் செய்வோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினர். மேலும், சில இடங்களில் மணமக்களின் பெற்றோர்கள் போத்தீஸ் நிறுவனம் வழங்கிய சீதன பாத்திரங்களில் போத்தீஸ் நிறுவனர் ரமேஷின் பெயரையே பொறிப்போம் என்றும் மெய்சிலிர்க்க நன்றி தெரிவித்தனர். மணமக்களில் சிலர் சீதன வரிசையுடன் எங்களுக்கு திருமணம் நடத்தி வைத்த போத்தீஸ் நிறுவனர் ரமேஷையும், போத்தீசையும் சாகும் வரை மறக்கமாட்டோம் என்றும், போத்தீஸ் நிறுவனத்தின் புதிய தங்க நகைக்கடை ஸ்வர்ணமஹால் மேலும், மேலும் வளர வேண்டும் என்றும் தங்களது நன்றி கலந்த வாழ்த்துகளை கூறினர். அனைவரின் பரிபூரண ஆசியுடன் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. போத்தீஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் என பல பகுதிகளில் கிளைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.