கார் விரும்பிகள் மிக நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து வரும் புலி போல இருக்கும்  இந்த ஃபோக்ஸ்வேகன் ரகக் கார்களின் அறிமுக விலை என்ன தெரியுமா? 10.50 லட்சம் முதல் 17.50 லட்சம் ரூபாய் வரை. டைகுன் டைனமிக் மற்றும் டைகுன் ஃபெர்பார்மன்ஸ் உள்ளிட்ட இரண்டு ரகங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டைகுன்  டைனமிக்கின் கம்போர்ட் லைன் மேனுவல் மாடல் 10.50 லட்சம் ரூபாயிலும், ஹைலைன் மேனுவல் மாடல் 12.80 லட்சம் ரூபாயிலும் ஹைலைன் ஆட்டோமேட்டிக் மாடல் 14.10 லட்சம் ரூபாயிலும் டாப்லைன் மேனுவல் மாடல் 14.57 லட்சம் ரூபாயிலும் மற்றும் டாப்லைன் ஆட்டோமேட்டிக் மாடல் 15.91 லட்சம் ரூபாயிலும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொருபக்கம் ஃபெர்பார்மன்ஸ் ரகங்களின் ஜி.டி., மேனுவல் மாடல் 15 லட்சம் ரூபாயிலும் மற்றும் ஜிடி ப்ளஸ் ஆட்டோமேட்டிக் 17.50 லட்சம் ரூபாயிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.






இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே இதற்கான பதிவுகள் 12000த்தைக் கடந்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய பயணிகள் வாகனத்துக்கான சந்தையில் 3 சதவிகிதம் சந்தைப் பங்கினை அடைவதற்கு வழிவகுக்கும். சர்வதேச நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ரகக் கார்கள் 2020லேயே சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.இந்தியச் சந்தைக்காக ஃபோக்ஸ்வேகன் ஏற்கனவே ஒரு மாடலை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் ஸ்கோடா நிறுவனம் குஷாஅக் என்னும் மாடலை அறிமுகப்படுத்தியதை அடுத்து இந்தியா  2.0 திட்டம் என்கிற தனது புதிய ப்ளானை அறிமுகப்படுத்தியது. 


2020ல் சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் போலவேதான் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியிருக்கும் இந்த மாடலும் உள்ளது. மற்றபடி இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான அலாய் சக்கரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
காற்றோட்டமான முன்னிருக்கை, தானியங்கி தட்பவெப்பக் கட்டுப்பாரு, உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, மொத்தம் ஆறு ஏர்-பேக்களுடன் கூடிய பாதுகாப்பு வசதி, மலைப்பகுதிகளில் மற்றும் நீர் மீது ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள், டயரின் அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவி, இரண்டு டர்போ பெட்ரோல் என்ஜின்கள், 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் இதில் இருக்கின்றன. இவை அத்தனையும் சந்தையில் இதற்குப் போட்டி வாகனமான ஸ்கோடாவின் குஷாக்கில் மிஸ் ஆகின்றன என்கிறார்கள் ஆட்டோமொபைல் நிபுணர்கள்.


 


Also Read: விரைவாக 50 ரன்களை எட்டிய மும்பை... விக்கெட்டுக்காக ஏங்கும் கொல்கத்தா


Car loan Information:

Calculate Car Loan EMI