KKR vs MI Live: 15.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா, புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள மும்பை அணியும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முழுவீச்சில் களமிறங்கும்.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 23 Sep 2021 11:16 PM
வெங்கியின் ஓன் மேன் ஷோ

10 ஓவர்களுக்குள் 100 ரன்களை கடந்த கொல்கத்தா ... பட்டைய கிளப்பும் திரிபாதி - வெங்கடேஷ் ஜோடி

9.3 ஓவரில் 100 ரன்கள் அடித்த கொல்கத்தா, இன்னும் 63 பந்துகளில் 56 ரன்கள் அடித்தா வெற்றி, திரிபாதி 42, வெங்கடேஷ் 47 ரன்களுடன் பட்டைய கிளப்புகின்றனர்.

பவர்பேளேயில் கொல்கத்தா அணி 1/63

பவர்பேளேயில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. திரிபாதி 16, வெங்கடேஷ் அய்யர் 33 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 





பூம்..பூம்.. பும்ரா...

பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனா கில், முதல் விக்கெட்டை இழந்த கொல்கத்தா

கொல்கத்தா அணி முதல் விக்கெட்டை இழந்தது. பும்ரா பந்துவீச்சில் போல்ட ஆன கில் 13 ரன்களில் வெளியேறினார். தற்போது 3 ஓவர்களின் முடிவில் 40 ரன்கள் எடுத்துள்ளது.


 





மீண்டும் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் அய்யர்

இரண்டு ஓவர் முடிவில் 30 ரன்களை எடுத்த கொல்கத்தா, மீண்டும் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் அய்யர்.

முதல் ஓவரிலேயே சிக்ஸரை பறக்கவிட்ட கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி முதல் ஓவர் முடிவில் 15 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில், வெங்டேஷ் அய்யர் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். அதுவும் போல்ட் ஓவரில்..





Background

ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெறும் 34வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள மும்பை அணியும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முழுவீச்சில் களமிறங்கும்.


இரு அணிகளும் இதற்கு முன்பு ஐ.பி.எல். தொடர்களில் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெற உள்ள அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளனர். அதில், 2 முறை மும்பை அணியும், 1 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே, இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.