இந்தியாவில் கார் விற்பனை செய்யும் பிரபல வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்று வாக்ஸ்வேகன். இந்த நிறுவனத்தி பிரபல கார் வகைகளில் ஒன்று வாக்ஸ்வேகன் போலோ. இந்த கார் 2010ஆம் ஆண்டு முதல் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வகை காரின் உற்பத்தியை வாக்ஸ்வேகன் நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முடிவை அன்மையில் அந்த நிறுவனம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை வாக்ஸ்வேகன் இந்தியா செய்துள்ளது. அதில் வாக்ஸ்வேகன் போலோ கார் ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பதிவு அமைந்துள்ளது.
அதில், “சாலைகள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு முடிவு வரும். அந்தவகையில் 12 ஆண்டுகள் சாலையில் பயணம் செய்த எனக்கு பிரேக் போடும் தருணம் வந்துவிட்டது. முதல் முறையாக 2009ஆம் ஆண்டு புனேவிலுள்ள உற்பத்தி ஆலையில் நான் கண் திறந்ததை தற்போது நினைத்து பார்க்கிறேன். என்னுடைய இந்த 12 ஆண்டுகால பயணத்தில் நான் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். ஜெர்மன் பொறியாளர்களின் அம்சங்களை இந்தியர்களுக்கு கொண்டு சேர்பதில் என்னுடைய பங்கு அதிகம் இருந்தது.
என்னுடைய இந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வரும் வேளையில் நான் விட்ட பயணத்தை என்னுடைய எஸ்யூவி மற்றும் செடான் சகோதரர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். எப்போதும் எனக்கு உங்கள் இதயத்தில் ஒரு இடம் உண்டு என்று கருதுகிறேன். உங்களை அடுத்த முறை சந்திக்கும் வரை..” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தானாகவே பின்னோக்கி செல்லும் ஓலா ஸ்கூட்டர்கள்! தொடரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI