அமெரிக்காவின் பிரபலமான ப்ரூக்ளின் நகரத்தில் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த ரயிலில் மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கித் தாக்குதலினால் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Continues below advertisement


மக்கள் நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் ரயிலில் ஏறிய அந்த நபர் துப்பாக்கியுடன் கேஸ் மாஸ்க்குடனும் ரயிலுக்குள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். சுமார் 33 குண்டுகள் அவரது துப்பாக்கியில் இருந்து ரயிலில் சுடப்பட்டுள்ளது. அந்த நபர் கொண்டுவந்த கேஸ் மாஸ்கில் இருந்து வெளியேறிய புகையால் 13க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், ரயிலில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ப்ராங்க் ஜேம்ஸ். அவருக்கு வயது 62 ஆகும்.  அவரை மான்கட்டன் போலீசார் கைது செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண