Tata Nexon EV மற்றும் MG ZS EV ஆகியவை உலகளவில் மிகவும் பிரபலமான கார் வகைகளில் ஒன்று. இந்த இரண்டு EV களும் புதிய அவதாரத்தில் விரைவில் வரவேற்கின்றனர். Nexon மற்றும் ZS EV இரண்டு கார்களிலும் சிறப்பு அம்சங்களாக பெரிய பேட்டரி, கூடுதலான இடங்கள் மற்றும் மேலும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். 


Nexon EV ஐப் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட பதிப்பானது பெரிய 40 kWh பேட்டரி பேக்கைப் பெற்றுள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்ட வரம்பை விட 400km க்கும் அதிக செயல்திறனை கொண்டுள்ளது. தற்சமயம் Nexon EV ஆனது 312கிமீ வரம்பைக் கொண்டுள்ளது, அதே சமயம் நிஜ உலக வரம்பு 200கிமீ பிளஸ் வரம்பைக் காட்டிலும் சிறியதாக உள்ளது.




பெரிய பேட்டரி பேக்குடன், Nexon EV இப்போது நிஜ உலகில் குறைந்தபட்சமாகவே 300 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும் அதன் சக்தியை அதிகரிக்கும் வகையிலும், சார்ஜ் நேரங்களைக் குறைக்கும் வகையிலான அம்சங்களும் பெற்றுள்ளனர். அனைத்து சுற்று டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பல அம்சங்களுடன் Nexon EV உடன் புதுப்பிப்புகளையும் காண இருக்கிறோம். 


முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் மிகவும் ஆடம்பரமான உட்புறத்தை கொண்டு MG ZS EV அதன் புதிய வடிவத்தில் வெளிவர இருக்கிறது.தற்போதைய ZS EV ஆனது MG ஆஸ்டரின் பழைய பதிப்பை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் புதிய ZS மிகவும் நவீன உட்புறம், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பல அம்சங்களைச் சேர்க்கிறது.




முக்கியமாக, புதிய ZS ஆனது ஒரு பெரிய 51 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும், இது வரம்பை விட 500km அதிக செயல்திறனை கொண்டுள்ளது. இது 44.5 kWh பேட்டரி கொண்ட பழைய ZS இன் தற்போதைய அதிகாரப்பூர்வ வரம்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், புதிய முன்/பின்பக்க பம்ப்பர்கள் உள்ளிட்ட புதிய தோற்றத்துடன் ZS-ன் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி இடைவெளியை அதிகரிக்கும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரவிருக்கும் புதிய மலிவு விலை MG SUVக்கான இடைவெளியை விட்டுவிட்டு நெக்ஸான் EV ஐ விட ZS ஐ அதிக பிரீமியமாக மாற்றப்பட இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


 


Car loan Information:

Calculate Car Loan EMI