Upcoming Electric Cars 2024: டாடா, மாருதி மற்றும் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள், 2024ம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ள மின்சார கார் மாடல்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


மின்சார கார்கள்:


சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகனங்கள், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. வாடிக்கையாளர்கள் மின்சார வாகன பயன்பாட்டில் அத்க ஆர்வம் காட்டி வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டிக் கொண்டு மின்சார வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக பல பழைய மாடல் வாகனங்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்கான முதலீட்டை மின்சார வாகன உற்பத்தியில் மடைமாற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள, மிக முக்கிய நிறுவனங்களின் மின்சார கார் மாடல்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Tata Curvv:


டாடா நிறுவனத்தின் Curvv மாடல் இந்திய சந்தையில் மின்சார வாகன பட்டியலில் Nexon EV-க்கு மேல் வைக்கப்படும். இதன் டாப்-எண்ட் வேரியண்டை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிமீ தூரம் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தின் சியரா மின்சார வாகனம் அறிமுகமாகும் வரை அதன் முதன்மை தயாரிப்பாக இருக்கும் கர்வ் மாடல் இருக்கும். இது டூயல் மோட்டார் செட்-அப் மற்றும் ஆல் வீல் டிரைவ் கொண்டதாக உள்ளது.  அதே சமயம் ஸ்டேண்டர்ட் வேரியண்ட் ஒற்றை மோட்டார் லேஅவுட்டுடன் வருகிறது. Curvv ஒரு கூபே பாணி SUV ஆக இருக்கும் மற்றும் புதிய Nexon EV இல் காணப்பட்ட பல வடிவமைப்பு குறிப்புகளுடன் ஒத்திருக்கும். அதே நேரம் தோற்ற வடிவமைப்பு டாடா மோட்டார்ஸின் மிகவும் தீவிரமான ஒன்றாக இருக்கும்.


Mahindra XUV.e8:


டாடா மோட்டார்ஸைப் போலவே, மஹிந்திராவும் தனது முதல் முழு அளவிலான மின்சார எஸ்யூவியாக XUV.e8 மாடலை கொண்டு வருகிறது.  ஹாரியர் EV க்கு போட்டியாக வரும் இந்த மாடல்,  XUV700 போன்ற ஸ்டைலிங்கைப் பெறும். ஆனால் முழு அகலமுள்ள LED லைட் பார் மற்றும் வெற்று கிரில்லுடன் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.  XUV.e8 ஆனது 80kWh பேட்டரி பேக் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது.


Maruti eVX:


மாருதி நிறுவனத்தின் முதல் மின்சார கார் அடுத்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதியின் மின்சார கார் என்ற அடிப்படையில் இது ஒரு முக்கிய தயாரிப்பாக இருக்கும். eVX ஆனது ஒரு புதிய மின்சார SUV ஆகும். 60kWh பேட்டரி பேக்குடன் சுமார் 550கிமீ தூரம் ரேஞ்ச் வழங்கும் எனவும், அளவில் கிராண்ட் விட்டாராவை போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. என்ட்ரி லெவல் வேரியண்டிற்கு சிறிய பேட்டரி பேக் இருக்கலாம். புதிய eVX ஆனது மற்ற மாருதி கார்களில் இருந்து வேறுபட்ட ஸ்டைலிங் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI