Upcoming Bikes Scooters: மே மாதம் இந்திய சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


மே மாதம் அறிமுகமாகும் இருசக்கர வாகனங்கள்:


ஏப்ரல் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு மிகவும் உற்சாகமான மாதமாக இருந்தது, மேலும் பல புதிய வெளியீடுகளைப் பார்க்க முடிந்தது. அதன்படி, மே மாதமும் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி,  இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படும் அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ள்து. அதில் மிகவும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் மாறுபாடு தொடங்கி சக்திவாய்ந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர்கள் வரையிலான இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.


பஜாஜ் பல்சர் NS400:


பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் NS400 பைக் மாடலை மே 3, 2024 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக் இதுவரை வெளியான பல்சர்களில் மிகப்பெரிய பல்சர் பைக்காக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் இன்ஜின் தொடர்பான விவரங்கள் கசிந்திருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல் சந்தைப்படுத்தலின் போதே தெரியவரும். 


இதையும் படியுங்கள்: Bajaj Pulsar NS400: பஜாஜின் மிகப்பெரிய பல்சர் பைக் இதுதான்..! மே 3ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது என்எஸ்400


2024 Husqvarna Svartpilen 250:


இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஸ்ட்ரீட்ஃபைட்டர் 2024 Husqvarna Svartpilen 250 ஆகும். பைக் சமீபத்தில் ஹோமோலொகேடட் ஆக மாற்றப்பட்டது. எனவே இது இந்த மாதமே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Husqvarna சமீபத்தில் Svartpilen 401 மற்றும் Vitpilen 250 ஐ அறிமுகப்படுத்தியது.  ஆனால் இந்த பிராண்ட் முதலில் Svartpilen 250 மற்றும் Vitpilen 250 உடன் தான் இந்தியாவிற்குள் நுழைந்தது.  எனவே புதுப்பிக்கப்பட்ட Svartpilen 250 ஐ கொண்டு வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


Hero Xoom 125 மற்றும் Xoom 160:


ஹீரோ தனது அடுத்து வரவிருக்கும் இரண்டு ஸ்கூட்டர்களை EICMA 2023 இல் காட்சிப்படுத்தியது.  அதன்படி, Hero Xoom 125R மற்றும் Hero Xoom 160 ஆகிய மாடல்கள் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம். Xoom 125R ஒரு ஸ்போர்ட்டி 125cc கம்யூட்டர் ஸ்கூட்டராகும்.  அதேசமயம் Hero Xoom 160 மாக்சி-ஸ்டைல் ​​ஸ்கூட்டராக உள்ளது. 


புதிய பஜாஜ் சேடக் வேரியண்ட்:


பஜாஜ் சேடக்கின் புதிய வேரியண்டில் பஜாஜ் வேலை செய்து வருகிறது. இது மிகவும் மலிவு மற்றும் பட்ஜெட்டௌஇ கருத்தில் கொண்டு ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். சமீபத்தில் ஸ்கூட்டரின் உளவு காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்தன மற்றும் படங்கள் மிகவும் தெளிவாக இருந்தன. இது ஸ்கூட்டர் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி கொஞ்சம் தெளிப்படுத்தியுள்ளது .


ஒகாயா ஃபெராடோ டிஸ்ரப்டர்:


ஒகாயா நிறுவனம் பிரீமியம் எலக்ட்ரிக் பைக் பிரிவில் நுழைவதில் பணியாற்றி வருகிறது.  இதற்காக அவர்கள் ஃபெராடோ என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளனர். அவர்களின் முதல் மின்சார பைக் ஒகாயா ஃபெராட்டோ டிஸ்ரப்டர் ஆகும் . இது இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.


Car loan Information:

Calculate Car Loan EMI