இ வாகனம் அதாங்க எலெக்ட்ரிக் வாகனம் என்றாலே விலை எக்குத்தப்பாக இருக்கும் என்று பொது முடிவுக்கு வந்துவிட்டீர்களா? அப்படியென்றால் ஒரு சில நிமிடங்கள் பொறுமையாக இருங்கள். உங்கள் முன்முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு இதைப் படியுங்கள்.


உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் தேர்வு செய்ய எளிதாக எக்கச்சக்க மாடல்களில் இ வாகனங்கள் வரவிருக்கின்றன. உங்களுக்காக சிலவற்றை அறிமுகப்படுத்துகிறோம்.


டொயோட்டோ ஹ்ரிட்டர் (Toyota Hyryder)


இ வாகனம் ஏதேனும் ஒன்றை புதிதாக சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் சந்தையின் போக்கை பொறுத்திருந்து உன்னிப்பாக கவனிக்கப்போகிறோம் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதன் பங்குநிறுவனமான டொயோட்டோ நிறுவனம் என்ன சொல்கிறது தெரியுமா? டொயோட்டோ விரைவில் புதிய இ வாகனத்தை கொண்டுவர ஆயத்தமாகிவிட்டது. வேகன் ஆர் (Wagon R ) போலவே வடிவத்தில் கிட்டத்தட்ட ஒத்திருக்கும் தி டொயோட்டா ஹ்ரிட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இந்தியாவிலேயே மிகவும் குறைந்த விலை இ வாகனமாக இருக்கும்.




டாடா அல்ட்ராஸ் (Tata Altroz )


டாடா அல்ட்ராஸ் இ வாகனம் Tigor EV டைகர் இ வாகனம் போன்றே இருக்கும். 2020 ஆட்டோ எக்ஸ்போவுக்குப் பின்னரே டாடா அல்ட்ராஸ் இ வாகனம் தயாரிப்பு தொடங்கிவிட்டது. ஆனால் இதன் விலை டைகார் மற்றும் நெக்ஸான் இ வாகனத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பாக்கப்படுகிறது. 




எம்ஜி இவி எஸ்யுவி (MG EV SUV)


எம்ஜி கார் தயாரிப்பு நிறுவனமும் ஒரு எலக்ட்ரிக் எஸ்யுவி வாகனத்தைத் தயாரித்து வருகிறது. இந்திய சாலைகளுக்கு எனவே பிரத்யேகமாக வடிவமைத்து வருகிறது. இதன் பெயர் இன்னும் இறுதியாகவில்லை. சர்வதேச தரத்தில் இருந்தாலும் கூட உள்ளூர் சந்தைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் நெக்ஸான் இ வாகனத்தைவிட விலை குறைவானதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. அதாவது இதன் விலை ரூ.10 லட்சத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் பேட்டரி உயர்தரமானதாக ஹை ரேஞ்ச் உள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஹூண்டாய் (Hyundai EV SUV)


ஹூண்டாய் தான் இங்கு இ வாகனச் சந்தையில் மாஸ் காட்டும் என்றளவுக்கு அந்நிறுவனத்தினர் உற்பத்தியில் உத்வேகத்துட்டன் செயல்பட்டு வருகின்றனர். ஹூண்டாயின் புதிய இ வாகனம் சந்தைக்கு வர 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டாலும் எஸ்யுவி ரகத்தில் களமிறக்கப்படவுள்ள இந்த இ வாகனங்கள் மற்றவற்றைக் காட்டிலும் தனித்து நிற்கும் எனக் கூறப்படுகிறது. புதிய ஹூண்டாய் இ வாகனம், உள்ளூர் சந்தைக்கு ஏற்ப E-GMP கொண்டிருக்கும்.




ஜிடபிள்யுஎம் ஓரே ஆர்1 (GWM Ora R1)


கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் GWM ரக இ வாகனம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இது எப்போது இந்தியா வரும் என்பது தான் இன்னும் முடிவாகவில்லை. இது இங்கு இந்திய சந்தைக்கு வந்தால் நிச்சயமாக இது தான் அனைவரும் வாங்கக்கூடிய சிறிய ரக இ வாகனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  


Car loan Information:

Calculate Car Loan EMI