Toyota Smaller Land Cruise: டொயோட்டோ நிறுவனத்தின் சிறிய வெர்ஷன் லேண்ட் க்ரூசர் கார் மாடலின் விலை, ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டோ லேண்ட் க்ரூசர்:
பல்வேறு உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தைகளில் கிடைக்கும் லேண்ட் க்ரூசர் மாடல், டொயோட்டாவின் அதிகம் விற்பனயாகும் SUVகளில் ஒன்றாக உள்ளது. வாகனத்தின் சிறந்த கட்டமைப்பு தரம் மற்றும் எந்தவொரு சாலையிலும் செல்லக்கூடிய திறன் ஆகிய காரணங்களால் இது மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்நிலையில் இதை மேலும் பிரபலமாக்கும் விதமாக, லேண்ட் க்ரூசரை சிற்ய வெர்ஷனில் வெளியிட டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வேரியண்ட் என்ன?
தற்போதைய நிலவரப்படி, லேண்ட் குரூசர் மூன்று வடிவங்களில் கிடைக்கிறது. அதன்படி, 300-சீரிஸ், கிளாசிக் 70 சீரிஸ் மற்றும் பிராடோ லைட்-டூட்டி ஆகிய மூன்று வேரியண்ட்கள் உள்ளன. இந்நிலையில் சிறிய அளவிலான பிராடோ 250 தொடருடன் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது விரைவில் வட அமெரிக்காவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா 7-சீட்டர் லேண்ட் க்ரூஸர் சே எலக்ட்ரிக் கான்செப்ட் கார் போன்ற பிற மாடல்களிலும் பணியாற்றி வருகிறது . இது ஜப்பானில் நடைபெற உள்ள மொபிலிட்டி ஷோ 2023 இல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. Land Cruiser 250 இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நேரத்தில், டொயோட்டா ஒரு புதிய ஆஃப்-ரோடு ஃபோகஸ்டு, சிறிய அளவிலான வாகனம் பற்றிய தகவல்களை வழங்கியது. லேண்ட் க்ரூஸரின் இந்தப் புதிய வேரியண்ட் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கிடைத்த தகவல்கள்:
புதிய வாகானம் FJ க்ரூஸர், FC க்ரூஸர் அல்லது காம்பாக்ட் க்ரூசர் என ஏதேனும் ஒரு பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அல்லது லேண்ட் குரூசர் 50 அல்லது 60 போன்ற பெயரும் சூட்டப்படலாம். பேபி லேண்ட் குரூஸர் சில தீவிரமான ஆஃப்-ரோட் திறன்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஃபோர்டு ப்ரோன்கோ ஸ்போர்ட் மாடல் முதல் போட்டியாளராக இருக்கக் கூடும். பேபி லேண்ட் குரூஸர் 2024 லேண்ட் க்ரூஸர் மற்றும் காம்பாக்ட் க்ரூஸர் EV கான்செப்ட் ஆகியவற்றின் வடிவமைப்பை சார்ந்து இருக்கும். பம்பர், தடிமனான பாடி கிளாடிங் மற்றும் டெயில்கேட் பொருத்தப்பட்ட உதிரி டயர் போன்ற அம்சங்களைக் கொண்ட பாக்ஸி சில்ஹவுட்டைக் கொண்டிருக்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜின் விவரங்கள்:
தொடக்கத்தில் லேண்ட் க்ரூஸரின் சிறிய பதிப்பு ICE மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கும். பிறகு முழு மின்சார வேரியண்டும் தொடங்கப்படலாம். வட அமெரிக்காவில் 194 ஹெச்பி 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். மினி லேண்ட் குரூசரின் அனைத்து வேரியண்ட்களும் ஆல்-வீல் டிரைவ் (AWD) தரநிலையாக இருக்கும். சிறிய லேண்ட் க்ரூசர் 4,500 மிமீ நீளம் இருக்கும். இதன் அகலம் 1,800 மி.மீ. உயரம் 1,850 மிமீ, இது கொரோலா கிராஸை விட 204 மிமீ உயரமாக இருக்கும். 2024 லேண்ட் குரூசர் அமெரிக்காவில் சுமார் 55,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சிறிய லேண்ட் குரூஸர் 35,000 அமெரிக்கட டாலர்கள் வரை விற்பனையாகலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI