Export Two Wheelers Brand: இந்தியாவில் இருந்து பிப்ரவரி மாதத்தில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட, இருசக்கர வாகன பிராண்ட்களில் பஜாஜ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.


இருசக்கர வாகன ஏற்றுமதி:


இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனையில் இரு சக்கர வாகன விற்பனை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. அதோடு, கடந்த சில காலங்களாக உற்பத்தியாளர்களுக்கான மாதாந்திர விற்பனையானது தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.  உள்நாட்டு விற்பனையில் மட்டுமின்றி, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களின் ஏற்றுமதியும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மாடல்கள் உலகளவில் மற்ற நாடுகளில் அதிகம் விற்பனையாகின்றன. அந்த வகையில், பிப்ரவரி 2024 இல் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் ஐந்து இருசக்கர வாகன பிராண்டுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


பிப்ரவரி 2024 இல் டாப் 5 இருசக்கர வாகன ஏற்றுமதி:


யமஹா:


பிப்ரவரி மாதத்தில் அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்களின் பட்டியலில்,.  Yamaha ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதன்படி, கடந்த மாத்தில் அந்த நிறுவனம் 21,873 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஜப்பானை சேர்ந்த இந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்ட CBU வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது. அதே நேரத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட சில மாடல்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. யமஹாவின் ஏற்றுமதி பிப்ரவரி 2024 இல் 39.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.


ஹீரோ:


இந்தியாவின் சிறந்த விற்பனை பிராண்டான ஹீரோ மோட்டோகார்ப் , ஏற்றுமதியில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. Hero மற்ற நாடுகளுக்கு பல பயணிகள் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்கிறது. அதன்பட், பிப்ரவரி 2024 இல், ஹீரோ இரு சக்கர வாகன உற்பத்தியாளர் 23,148 யூனிட்களை ஏற்றுமதி செய்து, அந்த விற்பனையில் 90.6 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளார்.


ஹோண்டா:


ஹோண்டா உள்நாட்டு விற்பனையில் ஹீரோவை நிறுவனத்தை எட்டிப் பிடிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறது. ஆனால் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, ஹோண்டா நிறுவனம் ஹீரோவின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்படி,  பிப்ரவரி 2024 இல், ஹோண்டாவின் ஏற்றுமதி 44,744 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது.  பிப்ரவரி 2023 உடன் ஒப்பிடும்போது  இது 122 சதவிகிதம் கூடுதல் ஏற்றுமதியாகும்.


டி.வி.எஸ்


TVS தயாரித்த சில கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்கள் உலகளாவிய வெற்றியைப் பெற்றுள்ளன,  இந்த வெற்றியின் மூலம் கிடைத்த வரவேற்பால், Housur-ஐ தளமாகக் கொண்ட இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் 90,308 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.  பிப்ரவரி 2023 இல் 45,624 யூனிட்களை ஏற்றுமதி செய்த நிலையில், நடப்பாண்டில் 97.9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


பஜாஜ்:


இரு சக்கர வாகன ஏற்றுமதி என வரும்போது, ​​பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்  KTM மற்றும் பஜாஜின் சொந்த பல்சர் தொடர் போன்ற பிராண்டுகள் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிப்ரவரி 2024 இல், பஜாஜின் ஏற்றுமதி 1,24,157 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் தற்போது 7.9 சதவிகித வளர்ச்சியை பஜாஜ் நிறுவனம் கண்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI