EV Discounts Aug 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆகஸ்ட் மாத்தில் அதிக சலுகைகளை பெற்றுள்ள மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மின்சார கார்களுக்கு அதிரடி சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் 7 மாதங்களில் உள்நாட்டில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில், முன்பு எப்போதும் இல்லாத வரை கடந்த ஜுலை மாதத்தில் பதிவான சுமார் 15 ஆயிரத்து 500 யூனிட்களின் விற்பனை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ச்சியான ஆதரவு மற்றும் எதிர்வரும் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு, பல முன்னணி உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளன.
1. ரூ.10 லட்சம் வரை சலுகை பெற்ற கியா கார்
டாப் என்ட் க்ராஸ் ஓவர்கள் தொடங்கி மலிவு விலை ஹேட்ச்பேக் மின்சார கார்கள் வரையில், ஆகஸ்ட் மாதத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மிகப்பெரிய அதிரடி சலுகையாக கியா நிறுவனம் தனது EV6 ஃபேஸ்லிஃப் எடிஷன் கார் மாடலுக்கு 10 லட்ச ரூபாய் வரையில் சலுகை வழங்குகிறது. இதனால், இந்த ப்ரீமியம் மின்சார கார் மிகவும் அணுகக் கூடியதாக உருவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் மாடலானது, 84KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த கார் முழமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 633 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்கும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் எக்ஸ் - ஷோரூம் விலை 65 லட்சத்து 96 ஆயிரத்து 638 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விலைக்கு ஏற்ப ப்ரீமியம் அம்சங்களை கொண்ட இந்த கார், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
2. மஹிந்திரா XUV400
இந்த பட்டியலில் மஹிந்திராவின் XUV400 கார் மாடல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆனது, 34.5KWh மற்றும் 39.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 450 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. இந்த காரின் ஆன்ரோட் விலை சென்னையில் 16.62 லட்சத்தில் தொடங்கி 18.94 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. பல ப்ரீமியம் அம்சங்கள் நிறைந்த இந்த காரானது, பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
3. MG ZS EV
MG நிறுவனத்தின் ZS EV கார் மாடல் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பதோடு, ரூ.2.5லட்சம் வரை சலுகை பெற்றுள்ளது. இந்தியாவில் விற்பனையை தொடங்கி ஆறு ஆண்டுகளை பூர்த்தி செய்ததை குறிப்பிடும் விதமாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தொடக்க நிலை மின்சார காரான கோமெட், 60 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை பெறுகிறது. இதுபோக ஆஸ்டர் மற்றும் ஹெக்டர் கார் மாடல்களின் இன்ஜின் எடிஷன்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டாடா மின்சார கார்களுக்கான சலுகை:
இதுபோக சிட்ரோயன் eC3 கார் மாடலுக்கு ரூ.1.25 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 320 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஹுண்டாய் க்ரேட்டாவின் மின்சார எடிஷனுக்கு ஒரு லட்ச ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 470 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. இதுபோக டாடா நிறுவனத்தின் நெக்சான், ஹாரியர், பஞ்ச் மற்றும் கர்வ் ஆகிய மின்சார கார்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI