இந்தியாவில் கார் விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு முன்னணி நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக குறைந்த விலையில் ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்ட கார்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ரூபாய் 15 லட்சம் பட்ஜெட்டிற்குள் 7 இருக்கைககள் கொண்ட தரமான கார்களின் பட்டியலை காணலாம்.
1. Renault Triber:
ரெனால்ட் ட்ரைபர் நிறுவனம் ஒரு சொகுசான காராக உள்ளது. 7 இருக்கைகள் கொண்ட இந்த கார் எம்பிவி கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.3 லட்சம் முதல் ரூபாய் 9.17 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதில் 3வது வரிசையில் உள்ள இருக்கைகள் தேவைப்பாட்டால் நீக்கிக் கொள்ளலாம். ஒரு பெரிய குடும்பத்திற்கு ஏற்ற கார் இந்த கார் ஆகும். ப்ரண்ட் பவர் விண்டோஸ், சைட் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. Maruti Ertiga
மாருதி நிறுவனத்தின் முக்கியமான படைப்பாக எர்டிகா உள்ளது. இந்த கார் 7 இருக்கைகள் கொண்டது. பெரிய ஜன்னல்கள், வசதியான இருக்கைகள் போன்றவை இதன் சிறப்பம்சம் ஆகும். இதன் விலை ரூபாய் 9.12 லட்சம் முதல் ரூபாய் 13.41 லட்சம் வரை ஆகும். 1462 சிசி என்ஜின் திறன் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. 139 என்எம் டார்க் திறன் கொண்டது. இந்த காரின் உள்கட்டமைப்பு, வெளிப்புறத் தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. Mahindra Bolero:
மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்று பொலிரோ. இந்த எஸ்யூவி கார் ரூபாய் 9.81 லட்சத்தில் இருந்து ரூபாய் 10.93 லட்சம் வரை விற்கப்படுகிறது. 210 என்எம் டார்க் திறன் கொண்டது. டீசலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேனுவல் கியரிலே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் இருக்கைகள் மிகவும் வசதிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 3600 ஆர்பிஎம் கொண்டது.
4. Mahindra Bolero Neo:
மஹிந்திரா நிறுவனம் பொலிராவில் அளித்துள்ள அப்டேட் வெர்சன் Mahindra Bolero Neo ஆகும். இந்த கார் ரூபாய் 9.97 லட்சம் முதல் ரூபாய் 12.18 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த காரில் குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட இந்த கார் மேனுவல் கியர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் டேங்க் 60 லிட்டர் டீசல் தாங்கும் திறன் கொண்டது ஆகும். முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
5. Toyota Rumion:
டொயோட்டோ நிறுவனத்தின் ரூமியன் கார் 7 இருக்கைகள் கொண்ட கார் ஆகும். மாருதி எர்டிகாவின் தோற்றத்திலே இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கார் ரூபாய் 10.67 லட்சம் முதல் ரூபாய் 13.96 லட்சம் வரை விற்கப்படுகிறது. முன்பக்கம் 2 ஏர் பேக்குகள், சைட் ஏர்பேக்குகள் இந்த காரில் உள்ளது. 45 லிட்டர் பெட்ரோல் தாங்கும் வகையில் இந்த காரின் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 மற்றும் 6 கியரில் இந்த கார் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.
மேலே கூறிய இந்த கார்கள் அனைத்தும் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை மட்டுமே உள்ளது.
பட்ஜெட்டில் கார் வாங்க விரும்பும் பெரிய குடும்பத்தினர் வாங்குவதற்கு முதன்மை தேர்வாக இந்த கார்கள் உள்ளது. நகர்ப்புறங்களிலும் தொலைதூரங்களிலும் ஓட்டுவதற்கு இந்த கார் ஏதுவாக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI