இந்தியாவில் பாதுகாப்பு, தரம், மலிவான விலை ஆகியவை ஒருசேர இணைந்த கார் நிறுவனமாக வாடிக்கையாளர்கள் மனதில் இருப்பது டாடா நிறுவனம். டாடா நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்றாற்போலவும், அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு காரும் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பட்ஜெட் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக டாடா உள்ளது. இந்த சூழலில், 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள டாடா கார் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Tata Tiago:
டாடா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் எனப்படும் சிறிய ரக காரில் அசத்தலான படைப்பு டாடா டியாகோ. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இந்த கார் ஆகும். இந்த காரின் பெட்ரோல் மாடல் தொடக்க விலை ரூ.4.99 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். சிஎன்ஜி மாடல் தொடக்க விலை ரூ.6.90 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 பேர் அமரும் வகையில் 5 இருக்கைகள் உள்ளது. 35 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்ட டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஏர்பேக் உள்ளது. நகர்ப்புறங்களில் 22 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
2. Tata Altroz (Base Variant)
5 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டாடா ஆல்ட்ரோஸ். இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 21 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் தொடக்க விலை ரூ.6.89 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை விற்கப்படுகிறது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களும் உள்ளது. 6 கியர், 5 கியர் மாடல்களும் உள்ளது. டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. 37 லிட்டர் டேங்க் வசதி கொண்டது.
3. Tata Punch:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு டாடா பஞ்ச் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த கார் பலரின் முதன்மைத் தேர்வு ஆகும். இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. உள்கட்டமைப்பு, டேஷ்போர்டு, ஓட்டுவதற்கு எளிது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.6.19 லட்சம் ஆகும். 5 ஸ்டார் தரம், இரண்டு ஏர்பேக்குகள், எஞ்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதிகள், 90 டிகிரி திறக்கும் கதவுகள் போன்ற பல வசதிகள் உள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. டாடா பஞ்ச் மின்சார வாகனமாகவும் சந்தையில் கிடைக்கிறது. இந்த காரும் விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருகிறது.
4. Tata Tiago NRG:
டாடா டியாகோவில் மற்றொரு மாடல் டாடா டியாகோ என்ஆர்ஜி. நகர்ப்புறங்களை மையப்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 22 கி.மீட்டர் மைலேஜ் தரும் வசதி கொண்டது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உள்கட்டமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிலை ரூபாய் 7.2 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆகும்.
8 லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்க வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த கார்களை வாங்குவது குறித்து ஆலோசிக்கலாம். ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டோ, நிஸான் போன்ற கார்கள் இருந்தாலும் பட்ஜெட் விலையில் மிகவும் தரமான பாதுகாப்பு அம்சம் நிறைந்த காராக டாடா நிறுவனம் உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக டாடா உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI