BCCI Sponsor: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஸ்பான்சர் உரிமத்திற்காக போட்டியிடும் நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

குட்பாய் சொன்ன ட்ரீம்11

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு எதிரான மத்திய அரசின் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த பிரிவைச் சேர்ந்த ட்ரீம்11 செயலி பணம் வைத்து விளையாடும் அம்சத்தை நிறுத்தியுள்ளது. அதோடு, இந்திய அணி உடனான சுமார் 350 கோடி மதிப்பிலான தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தையும் முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாம். இதையடுத்து, புதிய ஸ்பான்சஷிப்பை தேடுதவற்கான பணிகளை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. இதனிடையே, பல முன்னணி நிறுவனங்களும் இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

உரிமத்திற்காக போட்டியிடும் நிறுவனங்கள்:

3 ஆண்டுகளுக்கு 358 கோடி ரூபாயை வழங்குவதாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வீரர்களின் ஆடைகள் உள்ளிட்டவற்றி ட்ரீம்11 விளம்பரங்களை பிசிசிஐ மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஈடாக பணத்தை வழங்க அதான்னி, அம்பானி, ஆட்டோமொபைல், நிதி செயலி என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டுவதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப் - அதானி Vs அம்பானி

  • ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வைத்திருப்பதோடு, ஒளிபரப்பு துறையின் ஜாம்பவானாக உருவெடுத்துள்ள அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப்பை பெற ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
  • ஐபிஎல் போட்டியின் பிரதான ஸ்பான்சராக உள்ள டாடா நிறுவனமும், இந்திய அணிக்கான ஜெர்சி ஸ்பான்சராக மாற விருப்பம் கொண்டுள்ளதாம்
  • இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான அதானி நிறுவனமும் விளையாட்டு உலகின் மூலம், தனது வியாபாரத்தை பெருக்க திட்டமிட்டுள்ளதாம்

குறுக்கே ஓடும் பெப்சி, டொயோட்டா

இந்திய தொழில் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அதானி, அம்பானி மற்றும் டாடா நிறுவனங்கள் போட்டியிடக்கூடும் என கூறப்படும் நிலையில், பிசிசிஐ-யின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமத்திற்கு பல முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,

  • சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா நிறுவனம் விண்ணப்பிக்கக் கூடும் என கூறப்படுகிறது
  • நிதித்துறையை சேர்ந்த ஆன்லைன் செயலி நிறுவனங்களான Zerodha, Angel One மற்றும் Groww ஆகியவை போட்டிக்கு தயாராகி வருகின்றனவாம்
  • இதுபோக பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சியும் இந்திய கிரிக்கெட் அணியின் ஹெர்சி ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்ற தீவிரம் காட்டுகிறதாம். ஏற்கனவே இந்த நிறுவனம் ஐபிஎல் போட்டிகளுக்கு பிரதான ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் முடிந்த ஸ்பான்சர்ஷிப்:

இந்திய அணிக்கான ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்ற ஒரு பக்கம் பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. அதேநேரம், கடந்த சில வருடங்களாக பிசிசிஐ ஸ்பான்சராக இருந்த பல நிறுவனங்கள் முழுமையாக கரைந்து போனதும், நிதி அழுத்தங்களை எதிர்கொணடதையும் மறக்க முடியாது. உதாரணமாக சஹாரா நிறுவனம் திவாலாகி உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார். பைஜுஸ் நிறுவனமும் அடையாளம் தெரியாமல் அழிந்து போனது. ஓப்போ நிதி அழுத்தத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது ட்ரீம்11 செயலியின் செயல்பாடுகள் சட்டத்தால் முடக்கப்பட்டுள்ளன.