TN Vehicle Resale: குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், வாகன மறுவிற்பனைக்கான விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன.
வாகன மறுவிற்பனை விதிகள்:
நீங்கள் பயன்படுத்திய உங்களது வாகனத்தை விற்கிறீர்களா? எனில் 10 ரூபாய் மதிப்பிலான நீதித்துறை சாராத முத்திரைத்தாள்களில் போடப்படும், விற்பனைக்கான ஒப்பந்தங்கள் இனி செல்லாது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அண்மையில் சென்னையில் அரங்கேறிய இரண்டு குற்றச்சம்பவங்கள் தான் இதற்கு காரணம். ஆம், ஈசிஆரில் பெண்கள் பயணித்த காரை ஒரு கும்பல் துரத்திச் சென்றது மற்றும் கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவங்களில், வாகன எண்ணை கொண்டு உரிமையாளர்களை அடையாளம் காண்பது காவல்துறைக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. காரணம், அந்த வாகனங்கள் பலமுறை மறுவிற்பனை செய்யப்பட்டு இருந்ததே ஆகும்.
போக்குவரத்து ஆணையம் உத்தரவு:
இந்நிலையில் மாநில போக்குவரத்து ஆணையர், அனைத்து பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (RTO) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் கையாளும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி அங்கீகாரச் சான்றிதழைப் பெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
யார் பொறுப்பு?
ஒருமுறை பதிவு செய்துவிட்டால், தனிநபர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் டீலர்கள் தான், அவை அதிகாரப்பூர்வமாக புதிய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றப்படும் வரை, குறிப்பிட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சம்பவத்திற்கும் பொறுப்பாவார்கள். இதைச் செயல்படுத்த, பயன்படுத்தப்பட்ட கார் டீலர்ஷிப்கள் அல்லது பார்க்கிங் இடங்களில் உள்ள வாகனங்கள், அரசாங்கத்தின் வாகன போர்ட்டலில் டீலரின் பெயரில் தற்காலிகமாகப் பதிவு செய்யப்படும், இருப்பினும் இது RC புத்தகத்தில் பிரதிபலிக்காது.
அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் பரிமாற்ற உத்தரவை (Transfer Order) (படிவம்-29) உருவாக்க பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பெறுவார்கள். இது முந்தைய உரிமையாளரையும் வாங்குபவரையும் ஆவணப்படுத்தும். தற்போது, இந்த செயல்முறை அரிதாகவே பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பின்பற்றப்படாத விதிகள்:
தமிழ்நாட்டில் சுமார் 30,000 பயன்படுத்தப்பட்ட வாகன டீலர்கள் உள்ள நிலையில், இதுவரை சுமார் 15 பேர் மட்டுமே தேவையான சான்றிதழைப் பெற்றுள்ளனர். இதனால் இந்தத் துறை பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை, பல டீலர்கள் உரிமை பரிமாற்றங்களைத் தவிர்த்துள்ளர். இந்நிலையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பதிவு நடவடிக்கையின் மூலம் அதிக டீலர்களைச் சேர்க்க போக்குவரத்துத் துறை முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் மட்டும் போதாது என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் டீலர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள கெடு விதிக்க வேண்டும் என்றும் துறைசார் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். காரணம், ரூ.25,000 என்ற கட்டணத்தை தாமக செலுத்த யார் தான் முன்வருவார்கள் எனவும் வினவுகின்றனர்.
தனிநபர்களுக்கான ரீசேல் கட்டணம்:
தனிநபர்களும் தங்களது வாகனத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைப்படி கட்டணம் செலுத்தி அதிகாரப்பூர்வமாக ஆவணங்களில் பெயரை மாற்ற வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் அநாவசியமான சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அதன்படி,
- இருசக்கர வாகன ரீசேல் - ரூ.150
- ஆட்டோ ரிசேல் - ரூ.300
- கார் ரீசேல் - ரூ.500
- பேருந்து/ட்ரக் ரீசேல் - ரூ.750
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் - ரூ.1,500 - ரூ.2,500
தேவையான ஆவணங்கள்:
- படிவம் 29 - உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம் (நகல்)
- படிவம் 38 - உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம் (வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தால்)
- பான் கார்டு
- பதிவுச் சான்றிதழ்
- காப்பீட்டு சான்றிதழ் உமிழ்வு சான்றிதழ்
- முகவரி ஆதாரம் - ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ரேஷன் கார்டு
- தடையில்லாச் சான்றிதழ் (NOC)
Car loan Information:
Calculate Car Loan EMI