CM Stalin: ”உங்களில் ஒருவன்” தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலினின் வீடியோ:


உங்களில் ஒருவன் எனும் தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 



  • “அப்பா” எனும் பொறுப்பு

  • அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா?

  • கல்விக்காக நிறைய செய்ய வேண்டும்!

  • கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?

  • டப்பிங் வாய்ஸ் பழனிசாமி!

  • பாலியல் குற்றங்கள்

  • உணவு மற்றும் ஆரோக்கியம்

  • வெளிமாவட்டப் பயணங்கள்

  • பற்றி எரிந்த மணிப்பூர் போன்ற தலைப்புகளில் முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக பேசியுள்ளார்.


 



மத்திய அரசு மீது குற்றச்சாட்டு


மேற்குறிப்பிடப்பட்ட தலைப்புகளில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும்போது ஆனந்தமாக உள்ளது. அப்பா என்ற உறவு எனக்கு மிகவும் நெருக்கமானது. என் பொறுப்புகள் இன்னும் கூடியுள்ளது. நான் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய கடைமைகள் நிறைய உள்ளன. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்குவதில்லை. தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை வழங்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. நம் உரிமையை கேட்பதே அற்ப சிந்தனை என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? என கேட்க தோன்றுகிறது.



எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்


பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை. டெல்லி தேர்தல் முடிவு குறித்து பழனிசாமி அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்று தான் இருக்கும். பழனிசாமியின் குரலே, பாஜகவிற்கான டப்பிங் குரல் தான். அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி என திமுக சொல்வதை அவர் நிரூபிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னுடையெ தோல்விகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக பேசியுள்ளார்.