கார் என்றாலே எல்லாரும் அவ்வளவு பிரியம்தான். டீசல், பெட்ரோல் என்ற காலம் மாறி எல்க்டிரிக் ரக கார்களின் காலமிது. அதுவும், கார்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் லக்ஷியாக வடிவமைப்பது கார் தாயாரிப்பாளர்களின் சாய்ஸ். கார் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கார்களில் பல அப்டேகளை வழங்குகிறார்கள். அப்படி, மிக பிரபலமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனத்திற்கே போட்டியாக சீன கார் தயாரிப்பு நிறுவனமான லீப்மோட்டார் (leapmotor) என்ற நிறுவனம் புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
C01 electric sedan-னில் அப்படி என்ன சிறப்பு என்றால், cell-to-chassis தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதில் உள்ள பேட்டரி மாடியூல்களை வாகனத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும். இதனால் காரின் எடை குறையும். மேலும், இந்த cell-to-chassis தொழில்நுட்பத்தில் 20 சதவீதம் காம்போனட்களின் பயன்பாடு குறைகிறது. அதாவது, 15 கிலோ அளவிற்கு குறையும். மேலும், பேட்டரிகளுக்கான இடம் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் 90 கிலோ வாட் அளவில் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 200 கிலோ வாட் பேட்டரியைக் கொண்டு 717 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று வரலாம். இந்த மாடலில் 3.7 நொடிகளில் 100 kmph வேகமெடுக்கும் திறன் கொண்டிருக்கிறது.
இதில் 3 ஸ்கிரீன், Qualcomm Snapdragon 8155 சிப், ஃபேசியல் ரெககனைசேசன், ஃபேஸ் ஐடி, அதிக ஆண்ட்ராய்ட் அப்கள், மற்றும் “Leapmotor Pilot”- அதாவது ஆட்டோமேடிக் டிரைவிங் சிஸ்டம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மாடல் தற்போதைக்கு சீனாவில் மட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. பின்னர், உலக அளவில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Leapmotor C01 கார் மாடலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இதன் விலை சீன பண மதிப்பில் 180,000 அல்லது 270,000 யுவன் yuan. ஆகும். இது ஐரோப்பிய பண மதிப்பில் 25,350 முதல் 38,000 யூரோ ( euros.)வரை ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து போட்டியாளராக உருவாகியிருக்கிறது லீப்மோட்டர் நிறுவனம்.
Car loan Information:
Calculate Car Loan EMI