மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தின் 164 பட்டமளிப்பு விழா தற்போது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது. 


இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியதுதான் சென்னை பல்கலைக்கழகம். காமராஜர் ஆட்சி காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்,  கலைஞர் ஆட்சி செய்த காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதைபோல, எனது தலைமையிலான ஆட்சியின் காலம் உயர்கல்வித்துறையின் பொற்காலமாக ஆகும் என திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அனைத்து மாணவர்களையும் முதல்வானக்க உருவாக்கப்பட்டதுதான்  ‘நான் முதல்வன்’ திட்டம். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை செய்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞரும் கூறக்கூடாது என்ற நிலையை உருவாக்கி வருகிறது தமிழ்நாடு அரசு. மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  இது மாணவர்களுக்கான அரசு என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்றும் கூறினார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண