சமீபத்தில் ஆன்லைன் ஆப்கள் மூலம் கடனம் தருவதாக கூறி பலரை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடன் தருவதாக கூறி ஒரு பெண்ணின் படத்தை வாங்கி ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அம்பத்தூர் மாதனாங்குப்பம் பகுதியில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சில நிதி நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தொலைபேசிக்கு ஒரு இன்ஸ்டன்ட் லோன் ஆப்பிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்தக் குறுஞ்செய்தியில் பணம் கடனாக உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அந்தக் குறுஞ்செய்தியை பார்த்த அப்பெண், அதில் இருந்த மொபைல் போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள் தேவையான அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களை கேட்டுள்ளனர். அதை அப்பெண் அனுப்பி வைத்துள்ளார். அதன்பின்னர் அவருடைய தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் இவருக்கு கடன் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவரிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கேட்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் தனக்கு கடன் வேண்டாம் என்று கூறியுள்ளார். 


அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, அவருடைய படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிகிறது. தன்னுடைய வீட்டில் அதிகமான அளவில் தூக்க மாத்திரையை உட்கொண்டு அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மோசடி கும்பல தேடி வருகின்றனர். ஆன்லைனில் இருக்கும் கடன் ஆப்களை மக்கள் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண