Thar Roxx vs Jimny, Scorpio N, Gurkha: தார் ராக்ஸ் கார் மாடலுக்கு இந்தியாவில் ஜிம்னி, கூர்கா மற்றும் ஸ்கார்ப்பியோ என் ஆகிய கார் மாடல்கள் போட்டியாக உள்ளன.

மஹிந்திரா தார் ராக்ஸ் Vs போட்டியாளர்கள்:

மஹிந்திரா தார் ராக்ஸ் 4x4க்கான விலைகள், 4WD வகைகளில் ரூ.18.79 லட்சம் முதல் ரூ.22.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4WD, 5-டோர், லேடர்-பிரேம் SUV பிரிவில்,  Roxx ஆனது மாருதி சுசூகியின் ஜிம்னி, ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்கா 5 டோர் மற்றும் மஹிந்திராவின் மற்றொரு வாகனமான ஸ்கார்ப்பியோ என் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. அந்த நான்கு SUV-க்களையும் ஒப்பீடு செய்து, எது சிறந்த ஆஃப்-ரோடர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 

பவர்ட்ரெயின் ஒப்பீடு

மஹிந்திரா தார் ரோக்ஸ் 4x4 எதிராக போட்டியாளர்கள்: பவர்ட்ரெய்ன்
  தார் ராக்ஸ் ஜிம்னி கூர்க்கா 5-கதவு ஸ்கார்பியோ என்
எரிபொருள் டீசல் பெட்ரோல் டீசல் டீசல்
இயந்திரம் 2.2-லிட்டர், 4-சிலிண்டர், டர்போ 1.5-லிட்டர், 4-சிலிண்டர், NA 2.6-லிட்டர், 4-சிலிண்டர், டர்போ 2.2-லிட்டர், 4-சிலிண்டர், டர்போ
சக்தி 152hp/175hp 105hp 140hp 175hp
முறுக்கு விசை 330Nm/370Nm 134Nm 320Nm 370Nm/400Nm
கியர்பாக்ஸ் 6MT/6AT 5MT/4AT 5MT 6MT/6AT

ஆஃப்-ரோட் விவரங்கள்:

மஹிந்திரா தார் ரோக்ஸ் vs போட்டியாளர்கள்: ஆஃப்-ரோடு புள்ளிவிவரங்கள்
மாடல் தார் ராக்ஸ் கூர்க்கா 5-கதவு ஜிம்னி ஸ்கார்பியோ என்
அப்ரோச் ஏங்கல் 41.7 டிகிரி 39 டிகிரி 36 டிகிரி என்.ஏ
டிபார்ட்சுர் ஏங்கல் 36.1 டிகிரி 37 டிகிரி 46 டிகிரி என்.ஏ
ரேம்ப் ஓவர் ஏங்கல் 23.9 டிகிரி 28 டிகிரி 24 டிகிரி என்.ஏ
கிரவுண்ட் கிளியரன்ஸ் என்.ஏ 233மிமீ 210மிமீ 187மிமீ
நீர் வேடிங் 650மிமீ 700 மி.மீ 310மிமீ 500மிமீ

தார் ராக்ஸ் சிறந்த அப்ரோச்சிங் ஏங்கலை கொண்டிருக்க, ஜிம்னி மிக உயர்ந்த டிபார்ட்சுர் ஏங்கலைக் கொண்டுள்ளது. கூர்கா 5-டோர் அதிக வாட்டர் வேடிங் திறன் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. மஹிந்திரா 5-டோர் தார் ராக்ஸ்க்கான கிரவுண்ட் கிளியரன்ஸ் வெளியிடவில்லை என்றாலும், 3-டோர் எடிஷன் 226 மிமீ கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

4WD அம்சங்கள்

மஹிந்திரா தார் ரோக்ஸ் 4x4 vs போட்டியாளர்கள்: 4WD அம்சங்கள்
  தார் ராக்ஸ் ஜிம்னி கூர்கா 5-டோர் ஸ்கார்பியோ என்
4L (லோ ரேஞ்ச் கியர்) ஆம் ஆம் ஆம் ஆம்
4H (ஹை ரேஞ்ச் கியர்) ஆம் இல்லை ஆம் ஆம்
2H (RWD) ஆம் ஆம் ஆம் ஆம்
ஃப்ரண்ட் டிஃப்ரென்சியல் லாக் இல்லை இல்லை கையேடு இல்லை
ரியர் டிஃப்ரென்சியல் லாக் எலெக்ட்ரானிக் இல்லை மேனுவல் இல்லை
பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்சியல் ஆம் ஆம் இல்லை ஆம்
டெர்ரெய்ன் மோட்ஸ் பனி, மணல், சேறு இல்லை இல்லை பனி, மணல், சேறு

 

விலை விவரங்கள்:

மஹிந்திரா தார் ரோக்ஸ் 4x4 vs போட்டியாளர்கள்: விலை (எக்ஸ்-ஷோரூம்)

 

தார் ராக்ஸ்

ஜிம்னி

கூர்கா 5-டோர்

ஸ்கார்பியோ என்

மேனுவல் (ரூ, லட்சம்)

18.79-20.99

12.74-13.69

18.00

21.37-22.98

ஆட்டோமேடிக் (ரூ, லட்சம்)

20.99-22.49

13.84-14.79

-

23.09-24.54

இரண்டு மஹிந்திரா நிறுவன கார்களும் நிச்சயமாக இங்கு அதிக விலை கொண்ட மாடல்களாகும்,  இரண்டுமே தங்கள் மற்ற இரண்டு போட்டியாளர்களை விட அம்சம் நிறைந்தவை ராக்ஸ் மற்றும் ஸ்கார்ப்பியோ என் ஆகிய இரண்டுக்கும் இடையே, Roxx ஸ்கார்பியோ N ஐ ஒரு அளவிற்கு மிஞ்சுகிறது. அதன் வடிவம், வீல்பேஸ் மற்றும் ஓவர்ஹேங்க்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, Scorpio N-ஐ விட Roxx அதிக திறன் கொண்ட ஆஃப்-ரோடராக இருக்கிறது..


Car loan Information:

Calculate Car Loan EMI