October Bank Leave: பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபரில் வங்கி விடுமுறை:


செப்டம்பர் மாதத்தின் கடைசி நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம். அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் பண்டிகை காலத்தின் மிகப்பெரிய மாதமாக அக்டோபர் உள்ளது. காந்தி ஜெயந்தி, நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற அனைத்து முக்கிய பண்டிகைகளும் இந்த மாதத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்தல், சாயம் பூசுதல், புதிய பொருட்களை வாங்குதல் போன்ற பணிகளை மக்கள் மேற்கொள்வார்கள். இதற்கும் நிறைய பணம் தேவைப்படுகிறது. இதற்காக பலர் வங்கிகளை அணுகலாம். ஆனால், பண்டிகைகள் இருப்பதால்  அக்டோபரில் வங்கிகள் பல நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வங்கி விடுமுறை பட்டியலை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அதற்கேற்ப நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால், தேவையற்ற நிதி சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை.


15 நாட்கள் வங்கி விடுமுறை:


ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் தொடங்கும் முன் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. பட்டியலின்படி, அக்டோபரின் 31 நாட்களில் சுமார் 15 நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள் மற்றும் பண்டிகை விடுமுறைகள் அடங்கும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அக்டோபர் மாதம் ஒரு நாள் வங்கிகள் மூடப்படும். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தசரா, விஜயதசமி, கதி பிஹு மற்றும் தீபாவளி காரணமாக வங்கிகள் வெவ்வேறு நாட்களில் மூடப்பட உள்ளன.


விடுமுறை நாட்கள் விவரங்கள்:



  • அக்டோபர் 1 - சட்டசபை தேர்தல் காரணமாக ஜம்முவில் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 3 - நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜெய்ப்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை.

  • அக்டோபர் 6 - ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் விடுமுறை

  • அக்டோபர் 10 - துர்கா பூஜை, தசரா மற்றும் மகா சப்தமி காரணமாக அகர்தலா, கவுகாத்தி, கோஹிமா மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 11 - தசரா, மஹாஷ்டமி, மகாநவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை மற்றும் துர்கா அஷ்டமி காரணமாக அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், கவுஹாத்தி, இம்பால், இட்டாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை

  • அக்டோபர் 12 - தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 13 - ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 14 - துர்கா பூஜை அல்லது தாசன் காரணமாக காங்டாக் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்படும்

  • அக்டோபர் 16 - லட்சுமி பூஜை காரணமாக அகர்தலா மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 17 - மகரிஷி வால்மீகி ஜெயந்தி மற்றும் காந்தி பிஹு அன்று பெங்களூர் மற்றும் கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை

  • அக்டோபர் 20 - ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 26 - நான்காவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

  • அக்டோபர் 27 - ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

  • அக்டோபர் 31 - தீபாவளியன்று நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்


UPI மற்றும் நெட் பேங்கிங் சேவை தொடரும்:


பண்டிகைக் காலமான அக்டோபரில் நாட்டின் பல மாநிலங்கள் பல்வேறு பண்டிகைகளில் வங்கிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கின்றன. வங்கி விடுமுறை நாளாக இருந்தாலும் UPI, Net Banking மற்றும் Mobile Banking ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம். இது தவிர ஏடிஎம்கள் மூலமாகவும் பணம் எடுக்கலாம்.