பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுடைய கார் விற்பனையை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனினும் அதன்பின்னர் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். அதன்படி ஒருவர் ட்விட்டர் தளத்தில்,”டெஸ்லா கார்கள் எப்போது இந்தியாவில் வரும்? அந்த கார்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேகமாக விற்பனைக்கு வரவேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த பதவிற்கு எலோன் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளார். அதில், “இந்தியாவில் எங்களுடைய கார்களை கொண்டு வர இன்னும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு அதிக வரி விதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த கார்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மட்டும் இந்திய வர உள்ளதாக தெரிகிறது. ஆகவே அதற்கான வரி மிகவும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக அந்த காரின் விலையும் இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க எலோன் மஸ்க் இந்திய அரசிடம் பேசி வருவதாக தெரிகிறது.
ஏற்கெனவே மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் விரைவில் எலக்டிரிக் கார்களை தயாரிக்க உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் டெஸ்லா நிறுவனமும் இந்தியாவிற்கு வரும்பட்சத்தில் எலக்டிரிக் கார்களின் விற்பனை தீவிரம் அடையும் என்று கருதப்படுகிறது. மேலும் ஓலாவின் எலக்டிரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் பெருமளவில் ஆதரவு கிடைத்தது. அதேபோல் டெஸ்லாவும் தன்னுடைய எலக்டிரிக் கார்களை முதலில் களமிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சத்தத்தை போலவே சத்தமில்லாமல் உயர்ந்தது RF பைக் விலை: ரூ.4000 வரை ஏற்றம் கண்ட ஃப்ளாக்ஷிப் மாடல்கள்!
Car loan Information:
Calculate Car Loan EMI