டாடா நிறுவனத்தின் கார்களில் மிகவும் பிரபலமான எஸ்யூவியாக இருப்பது சியாரா. பழைய சியாரா சக்கை போடு போட்ட நிலையில், அந்த மாடல் நிறுத்தப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் புதுப் பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த காரின் சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

Continues below advertisement

29.9 கி.மீ மைலேஜை எட்டிய டாடா சியாரா

டாடா மோட்டார்ஸின் புதிய சியரா அதன் மிக முக்கியமான வெளியீடாகும். மேலும், பல்வேறு மாற்றங்களுடன், புதிய சியரா புதிய பவர்டிரெய்ன்களையும் பெறுகிறது. அதோடு, 1.5 ஹைபீரியன் எஞ்சின் லிட்டருக்கு 29.9 கிமீ எரிபொருள் செயல்திறனைப் பெறுகிறது.

அது ஒரு ஆச்சர்யமூட்டும் எண்ணிக்கைதான். ஆனால், சியரா எப்படி அதை அடைந்தது தெரியுமா.? இந்தூரில் உள்ள நாட்ராக்ஸ் சோதனைப் பாதையில் சியரா இந்த செயல்திறனைப் பெற்றது. மைலேஜ் எண்ணிக்கை, சோதனைப் பாதையில்(Test Track) 12 மணி நேர ஓட்டத்திற்குப் பிறகு வந்தது. மேலும், டிரைவரை மாற்றுவதற்காக ஒரு சிறிய நிறுத்தத்துடன், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து இயக்கப்பட்டது. இது  மைலேஜ் செயல்திறனுக்கான சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது. அதே சமயம், வாடிக்கையாளர் கார்கள் மணிக்கு 190 கிமீ வேகத்தில் செல்லவதற்காக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 222 கிலோ மீட்டர் வேகத்தை சியாரா எட்டியுள்ளது.

Continues below advertisement

சோதனைக்கான நிபந்தனைகள் மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள்

இப்போது, எரிபொருள் செயல்திறன் அதிகமாக இருந்தாலும், இந்த சோதனைகள் குறிப்பிட்ட நிலைமைகளின்(Conditions) கீழ் அடையப்பட்டுள்ளன. மேலும், இந்த புள்ளி விவரங்களை நிஜ உலகில் பிரதிபலிப்பது கடினமாக இருக்கும். ஆனால், எரிபொருள் செயல்திறனுடன் பவர்டிரெய்ன்களின் அடிப்படையில், தொழில்நுட்பம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை இது காட்டுகிறது.

சியரா மூன்று பவர்டிரெய்ன்களைப் பெறுகிறது. இதில் 160ps மற்றும் 255Nm உடன் புதிய 1.5 லிட்டர் ஹைபீரியன் T-GDi எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸும் அடங்கும். 7 ஸ்பீடு DCA உடன் வரும் 106ps உடன் 1.5 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் உள்ளது.

எரிபொருள் திறன் இங்கு பல காரணிகளைப் பொறுத்தது மற்றும் உண்மையான எரிபொருள் திறன் உங்கள் ஓட்டும் முறை மற்றும் போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து மாறுபடும். டாடா மோட்டார்ஸ் விரைவில் சியராவின் அதிகாரப்பூர்வ எரிபொருள் திறன் புள்ளிவிவரங்களை வெளியிடும்.

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI