Tata Sierra Price: டாடா சியாரா காரின் தொடக்க நிலை மற்றும் மிட் லெவல் வேரியண்ட்களுக்கான விலை, போட்டியாளர்களை காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

டாடா சியாரா விலை அறிவிப்பு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனம் தரப்பிலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, சியாரா எஸ்யுவி கார் மாடல் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்ட இந்த காரின், தொடக்க நிலை விலையானது 11.49 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், மற்ற வேரியண்ட்களின் விலை விவரங்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான், மற்ற தொடக்க நிலை மற்றும் மிட் ஸ்பெக் வேரியண்ட்களின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாடா சியாராவின் விலை விவரங்கள்:

வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, சியாராவின் விலையானது 11.49 லட்சத்தில் இருந்து 18.49 லட்சம் வரை நீள்கிறது.

இன்ஜின்
 
ட்ரான்ஸ்மிஷன்
ஸ்மார்ட்+ (ரூ., லட்சம்)
ப்யூர் (ரூ., லட்சம்)
ப்யூர்+ (ரூ, லட்சம்)
அட்வென்ச்சர் (ரூ., லட்சம்)
அட்வென்ச்சர்+ (ரூ., லட்சம்)
1.5 லிட்டர் NA பெட்ரோல்
 
MT
11.49
12.99 
14.49 
15.29 
15.99 
1.5 லிட்டர் NA பெட்ரோல்
 
DCA
-
14.49 
15.99
16.79 
-
1.5-டர்போ பெட்ரோல்
 
AT
-
-
-
-
17.99 
1.5-டர்போ டீசல்
 
MT
12.99 
14.49 
15.99
16.49
17.19 
1.5-டர்போ டீசல்
 
AT
-
15.99
17.49 
-
18.49

2 வேரியண்ட்களுக்கான விலை என்ன?

சியாரா கார் மாடல் மொத்தமாக ஸ்மார்ட்+, ப்யூர், ப்யூர்+, அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர்+, அக்கம்ப்ளிஷ்ட் மற்றும் அக்கம்ப்ளிஷ்ட்+ என 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் 15ம் தேதி முன்பதிவு தொடங்கி ஜனவரி 15ம் தேதி முதல் விநியோகத்தை தொடங்க டாடா திட்டமிட்டுள்ளது. அதற்காக 5 வேரியண்ட்களுக்கான விலையை அறிவித்துள்ளது. அதேநேரம், சியாராவின் டாப் எண்ட் வேரியண்ட்களான அக்கம்ப்ளிஷ்ட் மற்றும் அக்கம்ப்ளிஷ்ட்+ ஆகியவற்றிற்கு தற்போது வரை விலை விவரங்கள் வெளியிடப்பவில்லை. முன்பதிவை ஒட்டி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களுக்கு செம்ம டஃப்:

டாடா மோட்டார்ஸின் புதிய சியாராவானது ப்ராண்டின் கர்வ் கார் மாடலுக்கு மேலேயும், ஹாரியருக்கு கீழேயும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடும் போட்டி நிலவும் மிட்-சைச் எஸ்யுவி பிரிவில் அறிமுகமாகி  ஹூண்டாய் க்ரேட்டா , மாருதி சுசுகி விக்டோரிஸ் , கியா செல்டோஸ் , மாருதி க்ராண்ட் விட்டாரா , டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் , ஹோண்டா எலிவேட் , ஃபோக்ஸ்வாகன் டைகன் , ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது. இந்நிலையில் வெளியாகியுள்ள விலை விவரங்களுடன் சேர்த்து, ஏற்கனவே உள்ள அம்சங்கள் மற்றும் வசதிகள் வாயிலாக போட்டியாளர்க்கு நெருக்கடி தரக்கூடிய மாடலாக சியாரா உருவெடுத்துள்ளது. 

சியாரா- இன்ஜின் விவரங்கள்:

சியாரா கார் மாடலானது 160hp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் கூடிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் , 106hp ற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உடன் கூடிய 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், மற்றும் 118hp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டமேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கூடிய 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று இயந்திர ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 

சியாரா- வசதிகள், அம்சங்கள்

விலைக்கு எற்ப ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள வசதிகள் வேறுபடுகின்றன. அதன்படி, 

ஸ்மார்ட்+ வேரியண்டானது LED DRLகள் மற்றும் டெயில்-லேம்ப்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட், பின்புற AC வென்ட்கள், 17-இன்ச் வீல்கள், நான்கு டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அத்தியாவசிய அம்சங்களைப் பெறுகிறது.

ப்யூர் மற்றும் ப்யூர்+ வகைகளில் பனோரமிக் சன்ரூஃப், 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே, ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் டூயல் ஜோன் காலநிலை கட்டுப்பாடு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர்+ டிரிம்களில் 18-இன்ச் வீல்கள், 360-டிகிரி கேமரா, டெரெய்ன் மோடுகள், பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் லெதரெட் டிரிம் மற்றும் சில கூடுதல் வசதி அம்சங்கள் உள்ளன.

அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட்+ வேரியண்ட்களில் 3 ஸ்க்ரீன் செட்-அப்கள் உள்ளிட்ட உயர்ரக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

சியரா ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. அதில் பிரிஸ்டைன் ஒயிட், ப்யூர் கிரே, கூர்க் கிளவுட், மூணாறு மிஸ்ட், பெங்கால் ரூஜ் மற்றும் அந்தமான் அட்வென்ச்சர் ஆகியவை அடங்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI