Tata Sierra EV: டாடா நிறுவனத்தின் அவினியா பிராண்டின் முதல் பிரீமியம் மாடல் மின்சார வாகனமும் 2026ம் ஆண்டில் சந்தைப்படுத்த உள்ளது.


டாடா சியாரா மின்சார வாகனம்:


டாடா மோட்டார்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியாரா மின்சார கார் வரும் 2026 நிதியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அதோடு, அதன் அவினியா பிராண்டின் வாகனமும் அதே ஆண்டில் அறிமுகமாகும் என,  அதன் முதலீட்டாளர் தின விளக்கக்காட்சியில் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.


டாடா சியரா EV அறிமுகம்:


சியரா EV முதன்முதலில் கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இது Altroz ​​இன் ALFA ஃபிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது என்பதை டாடா அறிவித்தது. இது 4,150 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம், 1,675 மிமீ உயரம் மற்றும் 2,450 மிமீ நீள வீல்பேஸைக் கொண்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் இரண்டாவது கான்செப்ட் வடிவம் காட்சியளித்தது. இது தயாரிப்புக்கு தயாராக இருப்பதைப் பார்க்கையில், 2020 கான்செப்ட்டின் தனித்துவமான நான்கு-கதவு வசதிக்கு பதிலாக, 5 கதவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது.


வெளியீடு எப்போது?


சியரா EV மார்ச் 2026க்கு முன் அறிமுகப்படுத்தப்படும் என்பதை டாடா இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இது பஞ்ச் EV மற்றும் வரவிருக்கும் ஹாரியர் EV போன்ற பிராண்டின் Acti.EV ஆர்கிடெக்ட்சரை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது டாடாவின் Gen2 EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.


வடிவமைப்பைப் பொறுத்தவரை, சியரா EV ஆனது 90களில் இருந்த உண்மையான சியராவிலிருந்து உடனடியாக அடையாளம் காணக்கூடிய சில குறிப்புகளைக் கொண்டிருக்கும். சிக்னேச்சர் வளைந்த பின் பக்க ஜன்னல்கள், ஸ்குவாரிஷ் வீல் ஆர்ச்கள் மற்றும் கான்செப்ட்டில் காணப்படும் உயர்-செட் பானட் அனைத்தும் உண்மையான சியராவை நினைவூட்டுகின்றன. இது அனைத்தும் உற்பத்தியின்போதும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tata Avinya EV அறிமுகம்


அவின்யா மின்சார வாகன பிராண்டின் முதல் வாகனமும், 2026 நிதியாண்டு முடிவடைவதற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் டாடா உறுதிப்படுத்தியது. டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா பேசுகையில்,”டாடா அவின்யா ஒரு தனி வாகனமாக இருக்கப் போவதில்லை, மாறாக ஒட்டுமொத்தக் கார்கள் மற்றும் எஸ்யூவிகளை உருவாக்கும் பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் பிராண்டாக இருக்கும்” என்று கூறியுள்ளர். அவினியா ரேஞ்ச் கார்கள் JLRன் மாடுலர் EMA பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டதாக இருக்கும், அவை செலவுகளைக் குறைக்க உள்ளூர்மயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அவின்யா கார் உற்பத்தி:


முதல் அவின்யா மாடலைப் பொறுத்தவரை, வடிவமைப்பு பாணி அல்லது மோட்டார் உள்ளிட்ட தொடர்பான விவரங்கள் அதிகம் அறியப்படவில்லை. மேலும் டாடாவும் அவின்யாவும் தனித்தனி பிராண்டுகளாக செயல்படுமா என்பதும் இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் அமைய உள்ள டாடாவின் புதிய ஆலையில் தான,  அவினியா ரேஞ்ச் கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்காக அந்நிறுவனம் ரூ 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த ஆலை ராணிப்பேட்டையில் வர வாய்ப்புள்ளது. இங்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார வாகனங்களை தயாரிக்கவும், டாடா நிறுவனம் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.


டாடா சியாரா:


டாடா சியரா தான் டாடா தயாரித்த முதல் SUV ஆகும். ஆனால், வெறும் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டிருந்ததால், இது நடைமுறைக்கு உகந்ததாக கருதப்படவில்லை. இருப்பினும் இதன் வடிவமைப்பு கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. பின்பக்க கண்ணாடி என்பது,  சாலையில் வேறு எந்த மாடலிலும் இல்லாத வகையில் இருந்தது. இதனால் சியா கார், வாகன ஆர்வலர்களிடையே பிரபலமான காராக மாறியது. டாடா நிறுவனத்தின் ஆல் டைம் லெஜண்டரி கார்களில் ஒன்றாக சியாரா கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI