இந்தியாவின் வாகன விற்பனையில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீக காலமாக தனது புதிய ரிலீஸில் உள்ள வாகனங்களை மெருகேற்றி வருகிறது. அசத்தலான ஸ்டைல், ஃபெர்பார்மன்ஸ் என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகின்றன டாடா கார்கள். இந்நிலையில் டாடா பஞ்ச் என்ற புதிய மைக்ரோ எஸ்யூவி காரை இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்த உள்ளது டாடா நிறுவனம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் டீசர் மூலமாக வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். மினி ஹாரியர் போல இதன் தோற்ற வடிவமைப்பு உள்ளதால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியுள்ளது. டாடா லைன் அப்பில் நெக்ஸானுக்கு அடுத்ததாக பஞ்ச் இருக்குமென்ற எதிர்பார்ப்பு உள்ளது.



இம்பேக்ட் 2.0 டிசைன் லேங்குவேஜ் கீழ் இந்த புதிய பஞ்ச் கார் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் டாடாவின் புதிய ALFA-ARC ஆர்கிடெக்சரில் வெளிவரும் முதல் எஸ்.யூ.வி ஆகவும் பஞ்ச் இருக்கும். புதிய பஞ்ச் கார் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் தோற்றத்தின் பெரும் பங்கை பிரதிபலிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. முகப்பு விளக்குகள் மற்றும் பகல்நேர பல்புகள் அனைத்தும் அப்படியே அச்சு அசலாக டாடா ஹாரியர் போன்றே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் என்னற்ற அம்சங்கள் இடம்பெறும் எனவும், அதில் பல அம்சங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்களில் முதல் முறையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் இது மிகவும் பாதுகாப்பான காராகவும் வெளிவரும் என டாடா தெரிவித்திருக்கிறது.



பன்ச் எஸ்யூவி காரில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். அடுத்தப்படியாக சற்று கூடுதல் பவரை வழங்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ்  இணைக்கப்படும். ஆனால் டீசல் என்ஜின் இடம் பெறாது. இந்த மைக்ரோ-எஸ்யூவி டாடா வாகனம் பின்பக்கத்தில் Y-வடிவில் டெயில்லைட்களை கொண்டுள்ளது. இவற்றுடன் காரை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் மேற்க்கூரை தண்டவாளங்களுக்கு மிகவும் எடுப்பாக உள்ளது. டாடா பஞ்ச் மாடலின் ஆரம்ப விலை ரூ.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம். அறிமுகத்திற்கு பிறகு இந்த டாடா காருக்கு மாருதி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்ட கார்களுக்கு விற்பனையில் போட்டியாக களமிறங்கும். அதேநேரம் மாருதி வேகன்-ஆர், ஹூண்டாய் ஐ10 நியோஸ் போன்றவையும் விலையில் இதற்கு போட்டியாக இருக்கும். இந்த காருக்கான முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. இருப்பினும், பல டீலர்கள் ஏற்கனவே முன்பதிவுகளை துவங்கிவிட்டார்கள்.


Car loan Information:

Calculate Car Loan EMI