மத்திய அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை மாற்றி விதிப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 12 மற்றும் 28 சதவீத வரி நீக்கப்பட்டு, இனி 5 மற்றும் 18 சதவீத வரியும், சில பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28 சதவீத வரியின் கீழ் இருந்த பல கார்களும் 18 சதவீத வரிக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பல கார்களின் விலைகளும் தடாலடியாக குறைந்துள்ளது.

Continues below advertisement

இந்த சூழலில், டாடா நிறுவனம் ஜிஎஸ்டி வரி மாற்றப்பட்ட பின்பு தங்களது நிறுவனத்தின் எந்தெந்த கார்கள் எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை கீழே விரிவாக காணலாம்.

எந்த காருக்கு எவ்வளவு விலை குறைப்பு?

1. Tata Nexon - ரூ.1.55 லட்சம்

Continues below advertisement

2. Tata Safari - ரூ.1.45 லட்சம்

3. Tata Harrier - ரூ.1.40 லட்சம்

4. Tata Altroz - ரூ.1.10 லட்சம்

5. Tata Punch - ரூ.85 ஆயிரம்

6. Tata Tigor -  ரூ.80 ஆயிரம்

7. Tata Tiago - ரூ.75 ஆயிரம்

8. Tata Curvv - ரூ.65 ஆயிரம்

1. Tata Nexon:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Tata Nexon ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 7.99 லட்சம் ஆகும். தற்போது இந்த கார் ரூபாய் 1.55 லட்சம் குறைக்கப்பட்டிருப்பதால் 6.45 லட்சம் ரூபாய்க்கே சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. 1200 சிசிக்கு கீழே உள்ள எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார். இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது ஆகும்.

2. Tata Safar:

டாடா நிறுவனத்தின் கம்பீரமான கார்களில் ஒன்றாக Tata Safari உள்ளது. டாடா சஃபாரியின் தொடக்க விலை ரூபாய் 15.49 லட்சம் ஆகும். இந்த விலையில் இருந்து இனி 1.45 லட்சம் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்டது இந்த கார். இது நெடுஞ்சாலைகளில் கம்பீரமாக செல்வதற்கு உகந்த காராக உள்ளது.

3.Tata Harrier:

டாடா நிறுவனத்தின் அசத்தலான படைப்பு இந்த Tata Harrier. இதன் தொடக்க விலை ரூபாய் 15 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 1.40 லட்சம் வரை விலை குறைப்பு செய்துள்ளனர். 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் கொண்ட இந்த கார் 7 ஏர் பேக்குகளை கொண்டது ஆகும். 2 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இது. 6 கியர்களை கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்காகவும் உள்ளது.

4. Tata Altroz:

பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்களின் தேர்வாக இருப்பது இந்த Tata Altroz ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 6.89 லட்சம் ஆகும். 22 வேரியண்ட்களை கொண்ட இந்த கார் ரூபாய் 1.10 லட்சம் வரை விலை குறைத்துள்ளனர். இதனால், இந்த காரின் விலை இனி 5.79 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. தள்ளுபடி அறிவித்தால் இன்னும் இதன் விலை குறைவாகும்.

5.Tata Punch:

இன்று இந்தியாவில் பலராலும் விரும்பி வாங்கும் காராக இருப்பது இந்த Tata Punch ஆகும். டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான இந்த படைப்பு பெட்ரோலில் ஓடும் கார் ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 6.19 லட்சம் ஆகும். இந்த காரின் விலையை ரூபாய் 85 ஆயிரம் வரை குறைத்துள்ளனர். இதனால், ரூபாய் 5.34 லட்சத்திற்கு இனி இதன் தொடக்க விலை இருக்கும். பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்களின் தேர்வாகவும் இந்த கார் உள்ளது.

6. Tata Tigor:

டாடாவின் மற்றொரு பட்ஜெட் விலை தயாரிப்பு காராக இந்த Tata Tigor உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 5.99 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 80 ஆயிரம் வரை விலை குறைப்பு செய்துள்ளனர். இதனால், இதன் ஆரம்ப விலை இனி 5.19 லட்சமாக இருக்கும். இந்த காரின் அதிகபட்ச விலையே ரூபாய் 10 லட்சத்திற்குள்தான் உள்ளது.

7.Tata Tiago:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக Tata Tiago உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 4.99 லட்சம் ஆகும். இந்த காருக்கு 75 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவித்துள்ளனர். இதனால், 4.24 லட்சம் ரூபாய்க்கு இந்த காரின் தொடக்க விலை இனிமேல் இருக்கும். பெட்ரோலில் ஓடும் இந்த காரின் அதிகபட்ச விலையே ரூபாய் 9 லட்சம் வரை ஆகும்.

8.Tata Curvv:

டாடா நிறுவனத்தின் மற்றொரு வெற்றிகரமான படைப்பாக Tata Curvv உள்ளது. பெட்ரோல் மற்றும் எத்தனாலில் ஓடும் இந்த கார் 6 கியர்களை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 9.99 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 65 ஆயிரம் வரை விலை குறைத்துள்ளனர். இதனால் இனி 9.34 லட்சத்திற்கு இந்த கார் விற்பனை செய்யப்படும்.

டாடா விலையை குறைத்துள்ள மேலே கூறிய அனைத்து கார்களும் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் கார் ஆகும். இந்த கார்களின் விலையை டாடா குறைத்திருப்பதற்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


Car loan Information:

Calculate Car Loan EMI