டாடா மோட்டார்ஸ் இரண்டாவது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. Tigor EV என்ற இந்த மாடலை நேற்று டாடா அறிமுகம் செய்தது.  இதன் விலை ரூ.11.99 லட்சம் முதல் ரூ.13.14 லட்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tigor EV மாடலானது 3 வகைகளில் வெளிவரவுள்ளது. அதன்படி விலையானது ரூ.11.99 லட்சம், ரூ.12.49 லட்சம்,மற்றும் ரூ 12.99 லட்சமாகும்.  டாடா தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் மாடலில் நாடு முழுவதும் பிரபலமடைந்தது.  nexon EV மற்றும் தற்போது வெளியீடான Tigor EV ஆகியவை 70 நகரங்களில் இருந்து 150 விற்பனை நிலையங்கள் மூலம் தங்களது விற்பனையை தொடங்குகிறது. 






இந்த மாடல் பாதுகாப்புக்காக 4 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்துள்ளது.


இது குறித்து தெரிவித்துள்ள டாடா மோட்டார்ஸிப் பயணிகள் வாகன வணிக பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா, உலக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகளவில் விரும்பத் தொடங்கிவிட்டனர்.இப்போது இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகன மோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கடந்த ஒரு வருடமாக பல மடங்கு வளர்ந்து வரும் வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளும் விகிதத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. எகோசிஸ்டத்தின் வளர்ச்சி காரணமாக இப்போது வாடிக்கையாளர்கள் மின்சார வாகனத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதனை மனதில் கொண்டு வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தவும், தேசத்தை நோக்கி மின்சார வாகனங்களை செலுத்துகிறோம் என்றார்.  




மேலும், மலிவான விலையில் அதிக சிறப்பம்சங்களைகொண்ட வாகனத்தை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப நாங்களை இதனை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளோம். இது சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பும் கூட என்றார்.


டாடா மோட்டார் இதுவரை 8500 எலெக்ட்ரிக் வாகனங்களை  இதுவரை விற்பனை செய்துள்ளது.அதில் 6500 nexon EV ஆகும். இந்த கார்களுக்கான சார்ஜர்களை வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 680 சார்ஜர் ஸ்டேசன்கள் இந்தியாவின் பல நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.






Car loan Information:

Calculate Car Loan EMI