Tata Motors: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை 1 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், வணிக வாகனங்களின் விலை 2 சதவிகிதம் வரை உயர உள்ளது.


விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்:


நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,  தனது வணிக வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலை சுமார் 2 சதவிகிதம் உயர உள்ளது. புதிய விலை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. டாடா மோட்டார்ஸ், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த உயர்வு அனைத்து வகையிலான வாகனங்களுக்கும் வேறுபடும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


மார்ச் மாதத்தில் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்:


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது புதிய வாகனங்களை சந்தைப்படுத்த்த  தயாராகி வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜென் நெக்ஸ்ட் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும். வருவாயில் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த மார்ச் மாதம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை 2 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் தான் மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் வருவாய் 2024 நிதியாண்டில் 52.44 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படியுங்கள்: Top 5 EV Companies: டெஸ்லா தெரியும்..! ஆனா, அதுக்கே டஃப் கொடுக்கும் மற்ற 5 மின்சார கார் உற்பத்தியாளர்களை தெரியுமா?


26% லாபம் அளித்த டாடா மோட்டார்ஸ் பங்கு:


இந்த ஆண்டு, டாடா மோட்டார்ஸ் பங்குகளும் (டாடா மோட்டார்ஸ் ஷேர்ஸ்) சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இது சுமார் 26.6 சதவீதம் உயர்ந்துள்ளது. புதன்கிழமை பிற்பகலில், தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.2.40 (0.24 சதவீதம்) குறைந்தது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் சுமார் ரூ.983 விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் இந்த ஆண்டு பலமுறை ரூ.1000ஐ தாண்டியுள்ளது.


மின்சார எடிஷனில் ஃப்ரீலேண்டர்:


இதனிடையே, டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் பிரபலமான ஃப்ரீலேண்டர் காரை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் செரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஃப்ரீலேண்டர் மின்சார எடிஷனில் கொண்டு வரப்பட உள்ளது. ஃப்ரீலேண்டர் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI