Tata Harrier & Safari: டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் பெட்ரோல் எடிஷன் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாடாவின் புதிய ஹாரியர் & சஃபாரி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும், டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் பெட்ரோல் எடிஷன்கள் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளன. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு புதிய எஸ்யுவிக்களும் வரும் டிசம்பர் 9ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் டாடாவின் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் TGDi (Turbo Charged, Direct injection)  பெட்ரோல் இன்ஜின் ஆனது, ப்ராண்டின் ஃப்ளாக்‌ஷிப் எஸ்யுவிக்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

Continues below advertisement

டாடாவின் 1.5 லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜின்

டாடாவின் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் TGDi இன்ஜின் ஆனது, 2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிகபட்சமாக 170PS மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும். BS6-ன் இரண்டாம் நிலை உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப இந்த புதிய இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. E20 எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் திறனை கொண்டுள்ளது. லேசான எடைகொண்ட அலுமினியம் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய இன்ஜின் ஆனது மேம்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் எரிபொருள் திறனை வழங்கும் என கூறப்படுகிறது.  இது வாட்டர் - கூல்ட் வேரியபள் ஜியோமெட்ரிக் டர்போசார்ஜர், வேரியபள் வால்வ் டைமிங் மற்றும் இண்டக்ரேடட் எக்சாஸ்ட் மேனிஃபோல்ட் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பலனடைகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கும்.

புதிய ஹாரியர் & சஃபாரி - உத்தேச விலை

ஹாரியர் மற்றும் சஃபாரியின் டீசல் எடிஷன்களை காட்டிலும், பெட்ரோல் எடிஷன்களின் விலை எளிதில் அணுகக் கூடியதாக இருக்கலாம். தற்போதைய சூழலில் ஹாரியர் டீசல் எடிஷனின் விலை 14 லட்சத்தில் தொடங்கி 25.25 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், சஃபாரி டீசல் எடிஷனின் விலை ரூ.14.66 லட்சத்தில் தொடங்கி ரூ.25.96 லட்சம் வரை நீள்கிறது.

சியாராவிலும் டர்போ பெட்ரோல் இன்ஜின்

டாடாவால் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள சியாரா கார் மாடலின் டாப் வேரியண்ட்களிலும், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. அதேநேரம், எண்ட்ரி லெவல் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம். இந்த இரண்டு வகையான பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களானது, காருக்கு போட்டித்தன்மை நிறைந்த தொடக்க விலையை நிர்ணயிக்க அனுமதிக்கிறது.

எஸ்யுவியின் பெட்ரோல் வேரியண்டிற்கான தொடக்க விலை ரூ.11 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம். சியாரா மாடலில் கூடுதலாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளதாம். தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஹாரியரின் பேட்டரி பேக்கேஜ் பாணியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சியாராவின் மின்சார எடிஷன் சந்தைப்படுத்தப்பட உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI