டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் டிசைனை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்தியாவில் நெக்ஸான் இவி (Nexon EV) மற்றும் டிகோர் இவி (Tigor EV) எனும் இரு மாடல் மின்சார கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், நெக்ஸான் இவி-யே டாடா விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் எலெக்ட்ரிக் காராகும். இந்தியாவில் டாடாவின் இவ்விரு மின்சார கார்களும் தற்போது விற்பனையில் இருக்கும் பிற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் மாடல்களைக் காட்டிலும் குறைவான விலையைக் கொண்டவையாக இவைக் காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், டாடா நிறுவனம் மூன்றாவது ஒரு மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. புதிய ஸ்டைல் மற்றும் அதிக சிறப்பு வசதிகளுடன் அந்த கார் உருவாக்கப்பட இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் காரின் மாடலை டாடா வெளியீடு செய்திருக்கின்றது. இதனை கான்செப்ட் மாடலாகவே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா கர்வ் (Tata Curvv) என அப்புதிய மின்சார காருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி விட உயரிய வசதிகளுடன் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முற்றிலும் கவர்ச்சியான மின்சார காராக கர்வ் உருவாகி வருவதை தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது, அதன் கர்வ் எனும் பெயருக்கு உகந்தவாறு அதிக வளைவான மற்றும் கட்டுமஸ்தான உடல் அமைப்பை இந்த மின்சார கார் பெற இருக்கின்றது. குறிப்பாக, கூபே ரக கார்களைப் போல் ஸ்லோப் ரக மேற்கூரையை கர்வ் காருக்கு கொடுக்க இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி இன்னும் பன்மடங்கு கண்கவர் தோற்றத்தில் இக்கார் உருவாக்கப்பட இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், புதிய கர்வ் மின்சார கார் தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் மற்றும் அதிக விலைக் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. டாடா நிறுவனம் அதன் புதிய டிஜிட்டல் டிசைன் தாத்பரியத்தைப் பயன்படுத்தியே இக்காரை உருவாக்க இருக்கின்றது. இத்துடன், இதன் உருவாக்கம் நியூ ஜென் 2 இவி ஆர்கிடெக்சரை பயன்படுத்தியும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. டாடாவின் இந்த ஜெனரேஷன் 2 இவி கட்டமைப்பு தளமானது மேம்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதன் வாயிலாக, மல்டி பவர் டிரெயின் வசதிக் கொண்ட வாகனங்களைத் தயாரிக்க முடியும்.
இந்த மின்சார கார் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என கூறப்படுகின்றது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது மிக அதிகளவில் டிமாணட் நிலவி வருகின்றது. அதேநேரத்தில், முதலில் இந்த கார் மின்சார வாகனமாகவும், பின்னர், எரிபொருள் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்கு கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் கார் மாடலை போல எரிபொருள் மற்றும் மின்சாரம் என இரு விதமான வெர்ஷன்களிலும் புதிய டாடா கர்வ் விற்பனைக்குக் கிடைக்கும். டாடா மோட்டார்ஸ் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் சியாரா எனும் கான்செப்ட் மின்சார கார் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த காரின் அடிப்படையிலேயே புதிய கர்வ் கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிசைனிலேயே இன்னும் சில மாற்றங்களுடன் இக்கார் உற்பத்திக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா கர்வ் மின்சார கார் பற்றிய எந்த முக்கிய விபரங்களும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மின்சார காரில் அதிக திறனை வெளியேற்றக் கூடிய பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக ஓர் முழுமையான சார்ஜில் 400 கிமீ முதல் 500 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் இக்காரில் பயன்படுத்தபட இருப்பதாக கூறப்படுகின்றது.
Car loan Information:
Calculate Car Loan EMI