மேம்படுத்தப்பட்ட ஜிக்சர் சீரிஸ்
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் ஜிக்சர், ஜிக்சர் எஸ்எஃப், ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் 250 எஸ்எஃப் ஆகிய மாடல்களில், ஜிக்சர் சீரிஸ் மோட்டர்சைக்கிளை விற்பனை செய்து வருகின்றன. அந்த மோட்டார்சைக்கிள்கள் 9 நிறங்களில் சந்தையில் கிடைக்கப் பெறுகின்றன. இதில் 3 மேட் எடிஷன் மோட்டார் சைக்கிள்களும் அடங்கும். அவற்றின் ஆரம்ப விலை ரூ.1.4 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 2.02 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல் மோட்டர் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வண்ணங்களில் ஜிக்சர் சீரிஸ்
ஜிக்சர் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மிட்-லைஃப் அப்டேட் மூலம் அதன் விற்பனை மற்றும் ஆயுளை நீட்டிக்க சுசுகி திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேக்கட் மற்றும் ஃபேர்டு என இருவித டிசைனிங்கில் புதிய நிறங்களில் அறிமுகமாகி உள்ளன. சிறிய 155சிசி ஜிக்சர் மாடல் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் பூளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான 2023 சுசுகி ஜிக்சர் SF 250 தற்போது மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No. 2 மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரிடான் புளூ ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் No.2 நிறங்களில் கிடைக்கிறது.
இன்ஜின் விவரங்கள்:
சுசுகி ஜிக்சர் 250சிசி மாடலில் 249சிசி, சிங்கில் சிலண்டர், ஆயில் கூல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.13 ஹெச்பி பவர், 22.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 155சிசி மாடலில் சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 13.41 ஹெச்பி பவர், 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.
சிறப்பம்சங்கள்:
2023 மாடல்களில் சுசுகி நிறுவனம் சுசுகி ரைட் கனெக்ட் வசதியை வழங்கி உள்ளது. இது மோட்டார்சைக்கிள்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை வழங்கும். இத்துடன் எஸ்.எம்.எஸ் அலெர்ட், மிஸ்டு கால் நோட்டிஃபிகேஷன், ஓவர்ஸ்பீடிங் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான ஸ்மார்ட்போன் செயலியை ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதேநேரம், புதிய ஜிக்சர் சீரிசில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
விலை விவரம்:
2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் சோனிக் சில்வர், மெட்டாலிக் ட்ரிடான் புளூ - ரூ. 2,02,500
2023 நேக்கட் ஜிக்சர் 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 ரூ. 1,95,000
2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 - ரூ. 2,02,000
2023 சுசுகி ஜிக்சர் SF - ரூ. 1,45,500
2022 சுசுகி ஜிக்சர் நேக்கட் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் புளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் ரூ. 1, 40,500
Car loan Information:
Calculate Car Loan EMI