Stellantis EV: ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் தனது லீப்மோட்டார்ஸ் ப்ராண்ட் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், முதலாவதாக மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளதாம்.

Continues below advertisement

ஸ்டெல்லாண்டிஸின் முதல் கார்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லீப் மோட்டார் ப்ராண்டை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச அளவில் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அதனை மற்றொரு உள்ளூர் அறிவிப்பின் மூலம் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் தான், இந்திய சந்தைக்கான சீனா பிராண்டின் திட்டங்கள் தொடர்பான சில தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அண்மையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குனரான சைலேஷ் ஹசேலா, “லீப்மோட்டாரின் முதல் காரை அடுத்த நிதியாண்டில் இந்திய சந்தையில் ஸ்டெல்லாண்டிஸ் அறிமுகப்படுத்தும்” என குறிப்பிட்டார். அதாவது ஏப்ரல் 2026 தொடங்கி மார்ச் 2027ம் ஆண்டு காலகட்டத்திற்குள் நிறுவனத்தின் முதல் கார் உள்ளூரில் சந்தைப்படுத்த உள்ளதாம். தொடர்ந்து பேசுகையில், “சப்-காம்பேக்ட் மற்றும் எண்ட்ரி லெவல் காம்பேக்ட் எஸ்யுவிக்களை முதல் மாடல்களாக அறிமுகப்படுத்த” நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் சைலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

B10 - காம்பேக்ட் எஸ்யுவி கார்

இந்திய சந்தைக்கான வாகன மாடல்கள் குறித்த சைலேஷின் கருத்து, உள்நாட்டில் B10 காம்பேக்ட் பிரிவி எஸ்யுவியை ஆராய்ந்து வருவதைக் குறிக்கிறது. இந்நிலையில் தான் முனிச்சில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் காம்பேக்ட் பிரிவு ஹேட்ச்பேக்கான B05 கார் மாடலை அறிமுகப்படுத்தியது. அதேநேரம், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யுவி கார்கள், குறிப்பாக மலிவு விலை பிரிவு, மோசமான சாலை நிலைமை ஆகியவற்றை கருத்தில் கொண்டால், லீப்மோட்டார் ப்ராண்ட் C10 கார் மாடலை தான் முதலாவதாக இந்திய சந்தைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. 

C10 கார் மாடல் விவரங்கள்:

லீப்மோட்டாரின் C10 காரானது 4,739 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 900 மில்லி மீட்டர் அகலம், ஆயிரத்து 680 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2,825 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டுள்ளது. இந்த காரானது இங்கிலாந்தில் 215hp/ 240Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 52.9KWh மற்றும் 69.9KWh பேட்டரி பேக் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது முறையே 410 கிலோ மீட்டர் மற்றும் 530 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் எரிபொருளின் கலவையாக இயங்கக் கூடிய, C10 காரின் ரேஞ்ச் எக்ஸ்டெண்டட் எடிஷனானது 975 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

லீப் மோட்டார் லைன் - அப்பில் B-பிரிவு ஹேட்ச்பேக் கார் மாடல் எதையும் ஸ்டெல்லாண்டில் தற்போது கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால், ஷைலேஷ் இந்திய சந்தைக்கு குறிப்பிட்டது T03 எனப்படும் A செக்மெண்ட் ஹேட்ச்பேக் ஆக இருக்கலாம். இது 3 ஆயிரத்து 620 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 652 மில்லி மீட்டர் அகலம், ஆயிரத்து 577 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2 ஆயிரத்து 400 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் இந்த காரானது 94hp/ 158Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. T03 காரில் இடம்பெற்றுள்ள37.3KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால், 265 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய சந்தைக்கு எந்த கார் மாடல் முதலில் கொண்டு வரப்படும் என்பது தற்போது வரை உத்தேசமாவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமியம் பிரிவு தான் இலக்காம்

சர்வதேச அளவில் குறிப்பாக ஐரோப்பாவில், லீப்மோட்டாரானது அடிப்படை, மலிவு விலை பிராண்டாக உள்ளது. ஆனால், இந்திய சந்தையில் இந்த சீன பிராண்டை ப்ரீமியம் மின்சார கார் பயனர்களை குறிவைக்கும் நோக்கில் சந்தைப்படுத்த ஸ்டெல்லண்டிஸ் திட்டமிட்டுள்ளது.  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், உதிரிபாகங்களாக சந்தைக்கு கொண்டு வந்து அசெம்பிள் செய்து விற்பனை செய்யக்கூடும் என கூறப்படுகிறது. இது செலவுகளை அதிகரிக்கும் என்பதால், லீப்மோட்டர் கார்களை ப்ரீமியம் மாடலாக நிலைநிறுத்துவதை காட்டிலும் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை. 

டீலர்ஷிப்களுக்கான திட்டம்

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் இந்தியாவில் லீப்மோட்டர் மாடல்களை தனித்தனி டீலர்ஷிப்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடவில்லை. அதாவது குறைந்தபட்சம் ஆரம்பத்தில் பெரிய விற்பனை இருக்காது என கருதி, நிறுவனம் இந்த கார்களை ஜீப் மற்றும் சிட்ரோயன் மாடல்களைக் கொண்ட அதன் மல்டி-பிராண்ட் ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே அதன் 50% சில்லறை விற்பனை நிலையங்களை மல்டி-பிராண்ட் ஷோரூம்களாக மாற்றியுள்ளதாகவும், அதன் அனைத்து ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களும் மின்சார வாகனங்களை கையாள முடியும் என்றும் சைலேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த ஆறு மாதங்களில் அதன் டீலர் நெட்வொர்க்கை 110 லிருந்து 150 அவுட்லெட்டுகளாக விரிவுபடுத்த ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI