- விஜய்யின் சுற்றுப்பயணத்திற்காக காவல்துறையினர் விதித்த நிபந்தனைகளை ஏற்க தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை.
- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் குவிந்துவரும் ஆதரவாளர்கள். டெல்லி சென்று வந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு. வரும் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது.
- தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
- பீகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்வது குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை.
- என் வாழ்க்கையை இப்படியே தொடர விரும்பவில்லை, எனக்கு விஷம் கொடுங்கள் என்று சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன் நீதிபதியிடம் கதறல். அது சாத்தியமில்லை என நீதிபதி பதில்.
- கர்நாடகாவில், புலியை பிடிக்க அமைக்கப்பட்ட கூண்டில் வனத்துறை அதிகாரிகள் 10 பேரை அடைத்த கிராம மக்கள். உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக பொதுமக்கள் ஆத்திரம்.
- அமெரிக்காவிற்கு செல்ல விசா பெறும் முறைக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விசா பெற பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியுடன் பேச இருப்பதாகவும், வரி பிரச்னை முடிவுக்கு வரும் என எண்ணுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு. ட்ரம்ப்புடன் பேசுவதை எதிர்நோக்கியிருப்பதாக மோடி பதில்.
- ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க, அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியதாக தகவல்.
- ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் UAE அணியை எதிர்கொள்கிறது. துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Top 10 News Headlines: செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை, விஷம் கேட்டு கன்னட நடிகர் தர்ஷன் கதறல், மோடியுடன் பேசும் ட்ரம்ப் - பரபரப்பான 11 மணி செய்தி
ஸ்ரீராம் ஆராவமுதன் | 10 Sep 2025 10:41 AM (IST)
Top 10 News Headlines Today Sept. 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.
11 மணி தலைப்புச் செய்திகள்
NEXT PREV
Published at: 10 Sep 2025 10:41 AM (IST)