Skoda Kylaq vs Kushaq: ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் கார் மாடல் விரைவில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.


ஸ்கோடா கைலாக்:


ஸ்கோடா நிறுவனம் தனது சப்-காம்பாக்ட் எஸ்யூவியான கைலாக்கை வரும் நவம்பர் 6 ஆம் தேதி இந்திய ஆடோமொபல் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அதனை தொடர்ந்து ஏற்கனவே எதிர்பார்த்தபடி, அடுத்த ஆண்டு இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கைலாக் என்றால் சமஸ்கிருதத்தில் கிரிஸ்டல் என்று பொருள் ஆகும். இந்த புத்ய கார் மாடல் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டு வருகிறது. குஷாக்கைப் போலவே, 1.0 லிட்டர் TSI உடன் கைலாக் 115 bhp மற்றும் 178 Nm உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஸ்டேண்டர்ட் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்கோடா கைலாக் வடிவமைப்பு விவரங்கள்:


குஷாக்குடன் ஒப்பிடும்போது, ​​புதிய தோற்ற வடிவமைப்பு மொழியுடன் கைலாக்கின் ஸ்டைலிங் வித்தியாசமாக இருக்கும்.  அதே வேளையில் உட்புறம் சற்று வித்தியாசமான பாணியில் இருக்கும். கைலாக் ஸ்பிலிட் ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய கிரில் போன்றவற்றைப் பெறும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், டிஜிட்டல் டயல்கள் போன்றவற்றுடன் குஷாக்கை பிரதிபலிக்கும், இருப்பினும், கைலாக் 360 டிகிரி கேமரா மற்றும் ADAS போன்ற அம்சங்களையும் கூடுதலாக பெறக்கூடும்.


ஸ்கோடா கைலாக் Vs  குஷாக்


தொடுதிரை அளவு குஷாக்கில் இருப்பத போன்றே தொடரும். ஆனால், 4 மீட்டர் சப்-காம்பேக்ட் ஆக இருந்தாலும், குஷாக்கை காட்ட்லும் கைலாக் சிறிய வீல்பேஸைக் கொண்டிருக்கும், அதாவது குறைந்த இடவசதியைக் கொண்டிருக்கும். கைலாக், குஷாக்கின் மீது ஆக்ரோஷமாக வடிவமைக்கப்படும், அதாவது தொழில்நுட்ப அம்சங்களில் வலுவானதாக சந்தைப்படுத்தப்படும். குஷாக்கில் கூடுதலாக DSG உடன் 1.5 TSI டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்க, கைலாக்க்ல் ஒரே ஒரு ஒற்றை 1.0 யூனிட்டை மட்டுமே இடம்பெறுவது இரண்டுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசமாக இருக்கும். ஆரம்பத்தில் இது ஏற்றுமதிக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது. பின்பு இந்தியாவிலும் சந்தைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


விலை விவரங்கள், போட்டியாளர்கள்:


கைலாக் கார் மாடலானது மாருதி பிரேஸ்ஸாவில் இருந்து தொடங்கி,  பெட்ரோல் மாடலான ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா 3XO, டாடா நெக்ஸான் மற்றும் கியா சோனெட் வரையிலான போட்டியாளர்களுடன் இந்திய சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். விலை மற்றும் பிற விவரங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். அதே நேரத்தில் நவம்பர் 6 ஆம் தேதி கைலாக் எப்படி இருக்கிறது மற்றும் காரில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். Kylaq குஷாக்கை விட மிகக் குறைவான விலையில் இருக்கும், மேலும் ஸ்கோடா பிரிவு தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கும் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கும் அதிக விலைய கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI