இந்தியா கூட்டணியை எதிர்த்து வரும் 30 ஆம் தேதி பாஜக போராட்டம் - எச்.ராஜா அறிவிப்பு , ஏன் தெரியுமா ?

இந்தியா கூட்டணியை எதிர்த்து வரும் 30 ஆம் தேதி தமிழகம் முழுவதுமாக பாஜக போராட்டம். இட ஒதுக்கீட்டை நீக்குவதாக கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் H ராஜா பேட்டி

Continues below advertisement

ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

Continues below advertisement

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா மற்றும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய H. ராஜா ,

சமீபத்தில் ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணத்தின் போது , இட ஒதுக்கீட்டை நீக்குவேன் என்று கூறியிருந்தார். இது நேரு காலத்தில் இருந்தே ராகுல் காந்தி குடும்பம் பாடும் அதே ராகம் ஆகும்.

இட ஒதுக்கீடு தொடர்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் தான் ஆதரவு என ராகுல் காந்தி பேசியுள்ளார். அமெரிக்காவில் பேசும் போது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த முடியாது , அதனை நீக்கி விட வேண்டும் என பேசியுள்ளார்.

அதனை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்ட வேண்டும். எனவே இது தொடர்பாக நாளைய தினம் டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை எதிர்த்து வரும் 30 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம் என பேசினார்.

அடுத்ததாக ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வரின் காப்பீடு திட்டம் என்றால் 2 லட்சம் தான் , ஆனால் மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இலவச காப்பீடு 5 லட்சமாக வழங்கப்படுகிறது, எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையின் அனுர குமார திசநாயக்க தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த H ராஜா ,

இலங்கை மக்கள் அவர்களுக்கு  தேவையான அரசை , வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். இலங்கை அரசோடு , தமிழக மக்கள் நலனுக்காக எப்போதும் மத்திய அரசு தொடர்பில் இருக்கும், உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola