flex fuel Motorcycles: ஃப்ளெக்ஸ் ஃப்யூல்  எனப்படும் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும்,  ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350, ஹோண்டா CB300F ஆகிய இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ:


பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 எனப்படும், பிரமாண்ட ஆட்டோமொபைல் கண்காட்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் அறிமுகமாக உள்ள வாகனங்களுக்கான கான்செப்ட் மாடல்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஃப்ளெக்ஸ் ஃப்யூல்  எனப்படும் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும்,  ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350, ஹோண்டா CB300F ஆகிய இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350:


85 சதவீதம் எத்தனால் கொண்ட பெட்ரோல்-எத்தனால் கலவையில் இயங்கும் கிளாசிக் 350 வாகனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.. இயந்திர ரீதியாக, ஃப்ளெக்ஸ் எரிபொருள் பைக் ஸ்டேண்டர்ட் கிளாசிக் 350-ஐ போலவே உள்ளது. அதாவது, 6,100ஆர்பிஎம்மில் 20.2ஹெச்பி மற்றும் 4,000ஆர்பிஎம்மில் 27என்எம் டார்க்கை உருவாக்கும் ஏர்-கூல்டு, 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் 5-ஸ்பீட் டிரான்ஷ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் மற்ற ராயல் என்ஃபீல்டு மாடல்களான Meteor, Hunter மற்றும் Bullet போன்றவற்றிலும் இருப்பதால், அந்த பைக்குகளின் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் எடிஷன்களையும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். தற்போது விற்பனையில் உள்ள கிளாசிக் 350 உடன் ஒப்பிடும்போது, ​​புதிய பைக்கில் காணப்படும் சிறப்பு பச்சை மற்றும் சிவப்பு வண்ணப்பூச்சுத் மட்டுமே புதியதாக உள்ளது. ​​கிளாசிக் 350 விலை ரூ.1.93 லட்சம் முதல் 2.25 லட்சம் வரை உள்ளது.   


இதையும் படிங்க: Tata Curvv diesel: டாடா நிறுவனத்தின் சர்ப்ரைஸ் - கர்வ் மாடலில் இப்படி ஒரு அம்சமா? கூடுதல் விவரங்கள் உள்ளே..!


ஹோண்டா CB300F:


ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஃப்ளெக்ஸ் எரிபொருளைப் போலவே , ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ் எரிபொருள் மாடலும்  தற்போது விற்பனையில் இருக்கும் அதன் எடிஷனிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. இதில் உள்ள 24hp, 25.6Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 293cc ஆயில்-கூல்டு SOHC இன்ஜின் ஆனது,  ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு சீக்வென்ஷியல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை 7.94 விநாடிகளில் எட்டி விடுகிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் சாதாரன CB300F விலை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.  ஹோண்டா ஏற்கனவே பிரேசில் போன்ற பிற சந்தைகளில் பல ஃப்ளெக்ஸ்-எரிபொருள் இணக்கமான பைக்குகளை விற்பனை செய்கிறது.


இதையும் படிங்க: Mercedes-Benz electric EQG: மெர்சிடஸில் மேலும் ஒரு மின்சார வாகனம் - ஆஃப் ரோட் ரைடுக்கான புதிய EQG


Car loan Information:

Calculate Car Loan EMI