Mercedes-Benz electric EQG: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின்  G Wagen மாடலின் மின்சார எடிஷனாக, EQG மாடல் சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளது.


Mercedes-Benz electric EQG:




Bharat Mobility Expo என்ப்படும் கண்காட்சியில் Mercedes-Benz நிறுவனம்,  அதன் எலக்ட்ரிக் வாகனமான EQG-யின் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. EQG என்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஐகானிக் மாடலான ஜி வேகனின் மின்சார எடிஷனாகும். புதிய கான்செப்ட் ஆஃப்-ரோடரின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. எலக்ட்ரிக் பதிப்பு EQG என்று அழைக்கப்படுகிறது.  ஆனால் மற்ற EQ மாடல்களைப் போன்று ஒரு பெஸ்போக் எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படாமல், EQG ஆனது மோட்டார்கள் மற்றும் பேட்டரிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட அதே ஜி வேகனின் லேடர் ஃபிரேம் சேஸிலேயே அமர்ந்திருக்கிறது.

 

வாகனத்தின் திறன்:


வாகனத்தின் திறனை பற்றி பேசுகையில், EQG ஒவ்வொரு சக்கரத்திற்கும் அபரிமிதமான இழுக்கும் சக்திக்கும் அதிக முறுக்குவிசையைக் கொடுக்கும். EQG ஆனது ஏராளமான வரம்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்த மாடலானது டீசல் அல்லது பெட்ரோல் ஜி-கிளாஸின் நடைமுறைத்தன்மையுடன் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EQG ஆனது SUV களின் அடிப்படையில் மின்சார வரம்பின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும்.  அதே நேரத்தில் உற்பத்தி பதிப்பு வரும்போது, இந்த மாடல் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  EQG ஒரு CBU ஆக இருக்கும்.  அதன் விளைவாக இந்த மாடல் இந்திய சந்தைக்கு விரைவாக கொண்டு வரப்படும்.

 


இதர அம்சங்கள், எதிர்பார்ப்புகள்:


ஸ்டைலிங் வாரியாக, EQG அதன் EV நிலையைக் குறிக்கும் பல தனித்துவமான அம்சங்களுடன் வித்தியாசமாகத் தெரிகிறது. முன்புறம் வித்தியாசமான தோற்றத்தையும்,  ரூஃப் விளக்குகளையும் கொண்டுள்ளது.  அது எல்.ஈ.டி ஸ்டிரிப் ஆகும். அதே நேரத்தில் வெவ்வேறு சக்கரங்களையும் கொண்டுள்ளது. மற்ற பெரிய மாற்றம் என்றால் அது பின்புற ஸ்டைலிங் ஆகும். ஏனெனில் இது கேபிள்களை சேமிக்க ஸ்பேர் வீலின் இடத்தில் ஒரு வால்பாக்ஸைப் பெறுகிறது. உட்புறமும் சற்றே வித்தியாசமானதாக உள்ளது. பட்டுப் பொருட்கள் மற்றும் மிகவும் எதிர்காலத் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. EQG இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான ஸ்லாட்டானது தற்போதைய பெட்ரோல் அல்லது டீசல் G வேகனை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், விலையும் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.




Car loan Information:

Calculate Car Loan EMI