கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனை நிறுவனம் வரலாறு காணாத விற்பனை சாதனை செய்துள்ளது. இது 117 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனை எனக் கூறப்பட்டுள்ளது.


நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார் விற்பனையால் தான் இந்த வரலாற்றுச் சாதனை நடந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.


இது தொடர்பாக ஜெர்மனியின் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனம் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


பெருந்தொற்று காலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனமானது அதன் சொகுசு கார்கள் விற்பனையில் 50% அதிகம் கண்டு சாதனை படைத்துள்ளது. 5586 சொகுசு கார்களை விற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை அமெரிக்கா, சீனா, ஆசிய பசிபிக் சந்தையில் விற்பனையாகியுள்ளது. உலகின் பிற பகுதிகளிலும் விற்பனையாகியுள்ளது.
கோஸ்ட் என்ற வகை காரை அறிமுகப்படுத்தியதே விற்பனை அதிகரிக்கக் காரணம். 2.6 டன் எடை கொண்ட, 3,50,000 யூரோ மதிப்புள்ள கல்லினன் எஸ்யுவி ரகத்தைச் சேர்ந்தது இந்த வகை கோஸ்ட் கார்.


ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் தலைமைச் செயல் அதிகாரி டோர்ஸ்டென் முல்லர் ஓட்வாஸ் வெளியிட்ட அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு ஒரு பிரம்மாண்டமான ஆண்டு என்று கூறியுள்ளார்.


117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாங்கள் மிக அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளோம். சர்வதேச சந்தையில் எங்களின் கார்களுக்கான தேவை எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.




ரோல்ஸ் ராய்ஸ் மோட்டர் கார்ஸ் நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. ஸ்பெக்டர் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.


20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் உருவானது. அப்போது பிரிட்டனில் உருவானது. ஆனால் 1998ல் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தை ஜெர்மனியின் பிஎம்டபிள்யு BMW நிறுவனம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


2019 டூ 2021 விற்பனை எப்படி?


பிரிட்டனின் வெளிநாட்டு உரிமையாளர்களைக் கொண்ட ஆட்டோ நிறுவனங்கள் 2021ல் 1.65 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் இது கடந்த 2020ஆம் ஆண்டை ஒப்பிடும் போது வெறும் 1% மட்டுமே அதிகம். பெருந்தொற்றுக்கு முன்னர் 2019ல் இந்த உற்பத்தி அளவு 29% அதிகம்.


2020ல் பெருந்தொற்று பரவினாலும் கூட கார்களின் தேவை இருந்தது. வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்தும், கணினி சிப்களுக்கு தட்டுப்பாடு இருந்ததால் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டது.


இவ்வாறு சொசைட்டி ஆஃப் மோட்டார் மேனுஃபாக்சர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI