பெட்ரோல் விலை உயர்வு, அதிகரிக்கும் காற்று மாசு ஆகியவை வாகன ஓட்டிகளை எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்த்தியுள்ளது. இரு சக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் வாங்குவதாக அரசு வெளியிட்ட தரவுகள் உணர்த்துகின்றன. 


இந்த தீபாவளி பண்டிகையின் போது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விரும்புவோருக்கான லிஸ்ட் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 


1. ஓலா எஸ் 1 (Ola S1)



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடுவதாக அறிவித்து, தங்கள் புதிய பயணத்தைத் தொடங்கியது. தற்போது ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பலரும் காத்திருந்து பெற்று வருகின்றனர். இந்த மாடல் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோர் ஓலா எஸ் 1 மாடலை வாங்கலாம். எனினும், இதனை முன்பதிவு செய்துவிட்டு, அதன் டெலிவரிக்காகக் காத்திருக்க வேண்டும். மேலும், இதன் முன்பதிவு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் டிசம்பர் மாதம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை  இரண்டாம் கட்ட முன்பதிவு தொடங்கப்படவுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.9 kWh லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 121 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கக் கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


2. சிம்பிள் ஒன் (Simple One)



இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இது. 4.8 kWh லித்தியம் ஐயான் பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர், ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விட ஆற்றல் வாய்ந்தது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் eco mode என்ற அம்சத்தைப் பயன்படுத்தினால், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 236 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சுமார் 1.9 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


3. டிவிஎஸ் ஐ க்யூப் (TVS iQube)



இந்த ஆண்டு டிவிஎஸ் நிறுவனம் தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இதில் 4.4 kWh எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 2.25 kWh லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு, அதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 75 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது இந்த மாடல். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 78 கிலோமீட்டர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் ஸ்கூட்டர் சுமார் 4.2 நொடிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டக் கூடியது என டிவிஎஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


4. ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X)



ஏத்தர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 2.61 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் 35 நிமிடங்களுக்குள் சுமார் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யும் சிறப்பம்சமும் இதில் உண்டு. ஒருமுறை சார்ஜ் செய்தால் இதில் சுமார் 116 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சுமார் 1.32 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI