Range Rover SV Ranthambore: ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் புதிய எஸ்வி ராந்தம்போர் கார், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ரேஞ்ச் ரோவர் எஸ்வி ராந்தம்போர் கார்:


ரேஞ்ச் ரோவர் எஸ்வி ராந்தம்போர் எடிஷன் கார், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ. 4.98 கோடியில் (எக்ஸ்-ஸ்வூரூம், இந்தியா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  உள்நாட்டில் விற்பனையில் உள்ள நீண்ட வீல்பேஸ் ரேஞ்ச் ரோவரை அடிப்படையாகக் கொண்ட இந்த வாகனம், பிராண்டின் பெஸ்போக் SV பிரிவால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ராந்தம்போர் எடிஷன் காரானது, இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் லிமிடெட் எடிஷன் என கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள்: Honda Activa Electric Scooter: தயார் நிலையில் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - எப்போது வெளியீடு? அம்சங்கள் என்ன?


எஸ்வி ராந்தம்போர் அம்சங்கள்:


ராந்தம்போர் எடிஷன் கார்கள் மொத்தமே 12 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.  ஒவ்வொன்றும் தயாரிப்பு எண்ணை குறிக்கும் (எ.கா. 1 இல் 12) பிஸ்போக் டோர் சில் பிளேட்களைக் கொண்டிருக்கும். SV பிரிவானது வெளிப்புறத்தில் புலியின் உடலில் உள்ள கோடுகளால் ஈர்க்கப்பட்டு, கிரில், டெயில் கேட் மற்றும் 23 இன்ச் டார்க் அலாய் வீல்கள். ஆகியவற்றில் ஒரு சிவப்பு நிற பூச்சு மற்றும் மாறுபட்ட கொரிந்தியன் ப்ரோன்ஸ் மற்றும் ஆந்த்ராசைட் ஆக்சென்ட்களை பயன்படுத்துகிறது.


உட்புறத்தில், நான்கு இருக்கைகள் கொண்ட கேபினில் காரவே மற்றும் பெர்லினோ செமி-அனிலைன் லெதர் கான்ட்ராஸ்ட் தையல் உள்ளது. இருக்கைகள் மீண்டும் புலியின் முதுகுத்தண்டில் உள்ள கோடுகளால் ஈர்க்கப்பட்ட எம்பிராய்டரியைப் பெறுகின்றன. கஸ்டமைஸ்ட் ஸ்கேட்டர்ட் குஷன்கள், குரோம் ஹைலட்ஸ், லைட் வெங்கே (அடர் வண்ண கட்டை) வெனியர்கள் மற்றும் வெள்ளை பீங்கான் டயல்கள் ஆகியவை ராந்தம்போர் எட்ஷனை ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் ரோவர் SV இலிருந்து மேலும் வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.


இது SV அடிப்படையிலானது என்பதால், பின்புற இருக்கை பயணிகள் முழுமையாக மடிக்கக் கூடிய இருக்கைகள், ஒரு இயங்கும் மேஜை, பயன்படுத்தக்கூடிய கப்ஹோல்டர்கள் மற்றும் SV பொறிக்கப்பட்ட கண்ணாடிப் பொருட்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பெட்டியை கொண்டுள்ளது.


இன்ஜின் & விலை விவரங்கள்:


இந்த லிமிடெட் எடிஷன் காரானது 400hp, 550Nm, 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் ட்யூபோ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆட்டோ[பையோகிராபி வேரியண்டில் காணப்படுகிறது, அதன் விலை ரூ. 2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம், இந்தியா). ராந்தம்போர் எடிஷன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்குவதாக ரேஞ்ச் ரோவர் பிராண்ட் அறிவித்துள்ளது..


Car loan Information:

Calculate Car Loan EMI