Honda Activa Electric Scooter: ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின், அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
மின்சார வாகனங்களுக்கான தேவை நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இந்த தேவையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் பெரிய ஆட்டோ நிறுவனமான ஹோண்டா, ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆக்டிவா இன்ஜின் எடிஷன் இந்திய ஸ்கூட்டர் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஆக்ட்வா மீதான நம்பிக்கயால், மின்சார இருசக்கர வாகன பிரியர்களும் புதிய ஆக்டிவா எலெக்ட்ர்க் ஸ்கூட்டர் எடிஷனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு எப்போது?
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2024 டிசம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் வரம்பும் சிறப்பாக இருக்கும் என நம்பபப்டுகிறது. இது மக்களின் இதயங்களை வெல்லும் என துறைசார் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்:
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற நிறுவனங்களின் வணிகங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தற்போதுள்ள இன்ஜின் எடிஷன் ஆக்டிவாவுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் எடிஷனின் தோற்றம் முற்றிலும் ஆச்சரியமாக இருக்கும். இது இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் முதல் தேர்வாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 100 முதல் 150 கிமீ வரையிலான வரம்பும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி திறனும் வலுவாக இருக்கும். ஸ்டேண்டர்ட் பேட்டரி பேக்கைப் பெற முடியுமா? ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Ola, Ather, TVS மற்றும் Bajaj போன்ற மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் நேரடி போட்டியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,00,000 முதல் ரூ.1,20,000 வரை நிர்ணயிக்கப்படலாம். எனினும் இதன் விலை குறித்து நிறுவனம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
Car loan Information:
Calculate Car Loan EMI