இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகன நிறுவனமான PURE EV, தனது ecoDryft மாடல் மோட்டார் சைக்கிளின் வெளியீட்டு விலையை அறிவித்துள்ளது. ஐதராபாத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதோடு, அந்த நகரில் உள்ள PURE EV இன் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி மையத்தில் ecoDryft மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இந்த முதல் மின்சார பைக்கின் விலை, டெல்லிக்கு மட்டும் பிரத்யேகமாக ரூ.99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிளின் விலை, ரூ.1,14,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-ரோடு விலை என்பது அந்தந்த மாநில அளவிலான மானியங்கள் மற்றும் RTO கட்டணங்களைப் பொறுத்து மாறுபடும்.
செயல்திறன்:
ecoDryft மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும். அத்துடன் டிரைவ்-ரெய்னில் AIS 156 சான்றளிக்கப்பட்ட 3.0 KWH பேட்டரி, ஸ்மார்ட் BMS மற்றும் புளூடூத் இணைப்புடன், 3 kW மோட்டார் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும். 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும்.
ட்ரைவ் மோட்:
இந்த வாகனத்தை மூன்று டிரைவிங் மோடுகளுடன் இயக்கலாம். அதன்படி புதிய இகோட்ரிஃப்ட் மோட்டார்சைக்கிளானது டிரைவ், கிராஸ் ஒவர் மற்றும் த்ரில் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள டிரைவ் மோட் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும். கிராஸ் ஒவர் மோடில் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், த்ரில் மோட் மணிக்கு அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் மின்சார மோட்டார் 4.2 ஹெச்பி திறனை வெளிப்படுத்துகிறது.
டெலிவெரி எப்போது:
இந்திய சந்தையில் இந்த ecoDryft மின்சார மோட்டார் சைக்கிளானது கருப்பு, சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கப் பெறுகிறது. Pure EV ecoDryft க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மார்ச் முதல் வாரத்தில் வாகனங்கள் டெலிவரி செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக பேசியுள்ள பியூர் EV நிறுவனம் தரப்பு, நாட்டின் இருசக்கர வாகன விற்பனையில் 65% பயண மோட்டார் சைக்கிள்களாகவே இருப்பதால், ecoDryft இன் வெளியீடு பெரிய அளவிலான மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலக்கு?
கடந்த இரண்டு மாதங்களில் பியூர் EV நிறுவனம் 100+ டீலர்ஷிப்களான PAN இந்தியா முழுவதும் டெமோ வாகனங்களை டெஸ்ட் டிரைவ்களுக்காகப் பயன்படுத்தியுள்ளது. இந்த பிராண்ட் இந்தியாவின் அனைத்து முன்னணி நகரங்களிலும் தனது டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் பியூர் EV நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI