கார் வச்சிருந்தா பணக்காரன் அப்படினு சொல்லக்கூடிய கால மலையேறிடுச்சுனுதான் சொல்லனும். இன்றைக்கு கார் வாங்குபவர்கள் அதிகரித்துவிட்டனர். அதிலும் சிலர் எவ்வளவு விலை கொடுத்து வாங்கிய சொகுசு காராக இருந்தாலும் அதனை மாடிஃபை செய்து தங்களுக்கு பிடித்தமான விதங்களில், வசதிகளில் வடிவமைத்துவிடுகின்றனர். இதற்கு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியர் போன்ற படங்களில் தாக்கமும் ஒருவித காரணம் எனலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த மோகம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இணையத்தில் உலாவும் சில கிரேஸி மாடிஃபைட் கார்களை பார்க்கலாம்.
1.செவ்ரோலெட் சோனிக் (Chevrolet Sonic )
இந்த காரை வைத்திருக்கும் நபர் மிகப்பெரிய பார்ட்டி விரும்பி போலும் . பின்பக்க இருக்கைகளுக்கு அருகில் இருக்கும் இடங்களை முற்றிலுமாக வண்ண விளக்குகள் மற்றும் மிகப்பெரிய ஸ்பீக்கரை பொருத்தி காரை மாடிஃபை செய்துள்ளார்.
2.பிடி குரூசர் (PT Cruiser)
ஒரு காலத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான அதே PT Cruiser வாகனம்தான் இது. நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்திவிட்டாலும் , இன்னும் இந்த காரை சிலர் மாடிஃபை செய்து டிரக் போல பயன்படுத்திவருகின்றனர் பாருங்கள்!
3.ஷூ கார்
இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர்தான் இதன் உரிமையாளரா என தெரியவில்லை. ஆனால் இந்த மாடிஃபைட் கார் அவருக்கு எந்த அளவுக்கி பிடித்திருக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. இதை எந்த காரின் உதிரி பாகங்களில் இருந்து தயாரித்தார்கள் என தெரியவில்லை . ஆனால் வாக்கி ரேஸஸ் என்ற பழமையான கார்டூன் ஒன்றில் இது போன்ற கார்களை வடிவமைத்திருப்பார்கள் . ஒரு வேளை இந்த கார் உரிமையாளர் ஒரு வாக்கி ரேஸ்ஸின் தீவிர ரசிகை போல!
4.சாத்தான் !
தலையில் கொம்பு , வாயில் சுருட்டு என மிரட்டலாக பார்ப்பவரை அச்சுறுத்தும் அளவில் மாடிஃபை செய்திருக்கிறார் இதன் உரிமையாளர். நிச்சயம் இவர் ஒரு மாறுபட்ட சிந்தனையாளராகத்தான் இருக்க வேண்டும். பொதுவாக சிகப்பு நிறத்தில் கொம்புகள் உள்ள உருவத்தை மேலை நாடுகளில் சாத்தான் என அழைப்பது வழக்கம்.அந்த கான்செப்டில்தான் இதனை உருவாக்கியிருக்கிறார் போலும்!
வோக்ஸ்வாகன் (Volkswagen)
பிரபலமான வோக்ஸ்வாகன் காரின் பாகங்களை கொண்டுதான் இந்த குட்டி கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கார் என்று சொல்வதா இல்லை பைக் என்று சொல்வதா என குழம்பும் அளவிற்கு இதனை மாற்றி வடிவமைத்துள்ளார் இதன் உரிமையாளர். ஆனால் நிச்சயம் இவை வோக்ஸ்வாகன் பிராண்டின் தீவிர ரசிகர் என்பதில் சந்தேகமில்லை.
ரீகல் லிமோசைன் (Regal Limousine)
இந்த கார் தொழிலதிபர்களின் விருப்ப தேர்வுகளில் ஒன்று . விலையும் அதிகம்தான். சொகுசு காரான இதனை வாங்கி ஒருவர் கிளாசிக் ஸ்டைலில் மாடிஃபை செய்துள்ளார்.1950 களில் உள்ள மாடலை போல தோற்றமளிக்கிறது இந்த ரீகல் லிமோசைன்
Car loan Information:
Calculate Car Loan EMI